முஸ்லிம்களின் கைதுகள்: உடன் தீர்வு வழங்க விசேட அதிகாரி நியமனம்

8 பேர் கொண்ட குழுவும் களத்தில்

0 704

தற்­போ­தைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­படும் போது ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக பதில் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத்தை நிய­மித்­துள்ளார்.

மேலும் இணைப்பு அதி­கா­ரி­க­ளாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களைச் சேர்ந்த 8 பேர் பதில் பொலிஸ் மா அதி­ப­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாட்டில் எந்தப் பகு­தி­யிலும் சந்­தே­கத்தின் பேரில் முஸ்­லிம்கள் கைது­செய்­யப்­படும் போது பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கினால் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளான முஸ்லிம் இணைப்பு அதி­கா­ரி­க­ளூ­டாக உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத்தை தொடர்பு கொண்டு தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு கொழும்பு, கொள்­ளுப்­பிட்­டியில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் இணைப்பு மத்­திய நிலையம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் கருத்துத் தெரி­விக்­கையில்;

உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரிபாத்­துடன்  நேற்று கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள முஸ்லிம் சிவில் சமூக மத்­திய நிலை­யத்தில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. கலந்­து­ரை­யா­ட­லை­ய­டுத்து சிறு கார­ணங்­க­ளுக்­காக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த சிலரை விடு­தலை செய்­து­கொள்ள முடிந்­தது என்றார்.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் பொலிஸ் மா அதி­ப­ரிடம் விடுத்த வேண்­டு­கோ­ளி­னை­ய­டுத்தே சந்­தே­கத்தின் பேரில் கைது செய்யப்படும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் பெற்றுக்கொள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.