ஹஜ் 2019: யாத்திரைக்காக 1000 பேர் காத்திருப்பு

0 598

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்து பதி­வுக்­கட்­டணம் தலா 25 ஆயிரம் ரூபா செலுத்­தி­யுள்ள சுமார் 1000 விண்­ணப்­ப­தாரிகள் ஹஜ் கட­மையை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்­டாவே கிடைக்­கப்­பெற்­றது. 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­யப்­பட்டு ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. அடுத்­த­வாரம் ஹஜ் முக­வர்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்; சிறு எண்­ணிக்­கை­யி­லான ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களைக் கொண்­டுள்ள ஹஜ் முக­வர்கள் ஒன்­றி­ணைந்து ஒரு குழு­வாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. 50 ஹஜ் பய­ணி­களைக் கொண்­டதே ஒரு குழு­வாகக் கரு­தப்­படும். தற்­போது ஹஜ் முக­வர்கள் 50 ஹஜ் பய­ணி­களைக் கொண்ட குழு­வாக ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளனர். 10–15 ஹஜ் பய­ணி­களைக் கொண்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளுக்கே 50 பேர் கொண்ட ஒரு குழு­வாக அமைத்­துக்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. பதிவுக் கட்­டணம் செலுத்­திய, ஹஜ் பயணத்துக்காகக் காத்திருக்கும் சுமார் 1000 ஹஜ் விண்ணப்பதாரிகள் அடுத்த வருடம் ஹஜ் கடமையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.