எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்

3 நாட்களில் சகல பயங்கரவாதிகளையும் பிடிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

0 612

விடு­த­லைப்­பு­லிகள் என்ற பெயரில் தமி­ழர்­களை போராட்டத்­திற்கு தள்­ளி­ய­தைப்போல் இந்த நாட்­டுடன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ரவாதத்­திற்குள் தள்ள­ வேண்­டுமா? நாட்­டுக்குள் இருக்கும் 150 பயங்­க­ர­வா­தி­க­ளாக அனைத்து முஸ்­லிம்­க­ளையும் பார்க்க வேண்டாம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சபையில் தெரிவித்தார். இன்னும் மூன்றே நாட்­களில் ஒட்டு­மொத்த பயங்க­ர­வாதிகளையும் பிடித்­துக்­காட்­டுவேன் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்த சபை ஒத்­தி­வைப்­பு­வேளை விவாதம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனா­தி­பதி சிறப்­பு­ரையை நிகழ்த்­தினார். இதில் அவர் கூறு­கையில்.

கடந்த 21 ஆம் திகதி தாக்­கு­தலின் போது  அதி­க­மாக பேசப்­பட்ட கார­ணி­யாக எனது வெளி­நாட்டு விஜ­யத்­தையே  பேசினர். நான் சிங்­கப்­பூரில் இருந்­த­போது  எனக்கு இந்த சம்­பவம் தெரி­ய­வந்­தது. அப்­போது எனக்கு ஏற்­பட்ட வேத­னையை அடுத்து இது எவ்­வாறு இடம்­பெற்­றது என்­பதை யோசித்தேன். ஆனால் சர்­வ­தேச பயங்­க­வ­ராத அமைப்­பினால்  இது நடந்­தது என அப்­போது எனக்கு புரி­ய­வில்லை. எமது பாது­காப்பு தரப்பின் கடிதம் ஒன்றும் அப்­போது சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது, அதனை நான் அவ­தா­னித்தேன். அப்­போ­துதான் இந்த சம்­பவம் குறித்து பாது­காப்பு தரப்­புக்கு தெரிந்­துள்­ளது  என்­பதை அறிந்தேன். ஆகவே இதற்கு யார் காரணம் என்­பதை கண்­ட­றிய விசா­ரணைக் குழுவை உரு­வாக்க நினைத்தேன். நான் நாட்­டுக்கு வர முன்னர் விசா­ரணை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்­து­விட்டேன்.

அடுத்த நாள் காலை பாது­காப்பு குழு கூட்­டப்­பட்­டது, அதற்கு முன்னர் விசா­ரணை ஆணைக்­குழு உறுப்­பி­னர்­களை நிய­மித்தேன். பின்னர் பாது­காப்பு சபையில் இது­கு­றித்து பேசினேன். இது குறித்து பிர­தமர் மற்றும் பாது­காப்பு பிர­தா­னி­களை தொடர்பு கொண்டு அடுத்த கட்டம் குறித்து பேசினேன். இனி­யொரு சம்­பவம்  இடம்­பெ­றாது இருக்­கவும் இதற்கு பொறுப்­பா­ன­வர்கள்  யார் என்­பதை கண்­ட­றிய  சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நான் முன்­னெ­டுத்­துள்ள்ளேன். அதன் பின்னர் ஒவ்­வொரு நாளும் இடம்­பெற்ற சந்­திப்­புகள், கலந்­து­ரை­யா­டல்­களின் போதும், வெளி­நாட்டு  உயர்ஸ்­தா­னி­கர்கள் அனை­வ­ருடன் பேசினேன், அதன் பின்னர் பொலிஸ் அதி­கா­ரிகள் அனை­வ­ரு­டனும் பேசினேன், சகல அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களை வர­வ­ழைத்து பேசினேன். இதில் சக­லரும் கலந்­து­கொண்­டனர். இந்த சந்­திப்பில் பல யோச­னைகள், விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அதன் பின்னர் சர்­வ­மத தலை­வர்­களை அழைத்து அவர்­க­ளு­டனும் பேசி அவர்­களின் ஆலோ­ச­னை­களை பெற்­றுக்­கொண்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து நட­வ­டிக்கை எடுத்தேன். பாது­காப்பு சபை கூட்­டத்தில் நாம் இது குறித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தோம்.

பின்னர் ஊடக பிர­தா­னி­களை அழைத்தும் பேசினேன். இப்­போ­துள்ள நிலை­மையில் நாட்டின் சூழ்­நிலை குறித்து ஊடகம் கையாள வேண்­டிய நிலை­மைகள் குறித்தும் ஆராய்ந்தோம். பின்னர் வர்த்­தக பிர­தி­நி­தி­களை அழைத்து சுற்­று­லாத்­து­றையை மீட்­டெ­டுக்கும் நட­வ­டிக்கை குறித்து பேசினேன். அதற்கு பின்னர் ஆளு­நர்கள் அனை­வ­ரையும் வர­வ­ழைத்து சகல மாகா­ணங்­களின் நிலை­மைகள், என்ன செய்ய வேண்டும், பொது­மக்கள் பாது­காப்பு, மாண­வர்­களின் பாது­காப்பு, பொதுப் போக்­கு­வ­ரத்து நிலை­யங்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வது குறித்தும் பேசினேன்.  பின்னர் எதிர்க்­கட்சித் தலைவர் , முன்னாள் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் என்னை சந்­தித்து தேசிய பாது­காப்பு குறித்து முன்னாள் பாது­காப்பு பிர­தா­னி­களின் அறிக்கை ஒன்­றி­னையும் வழங்­கினார்.  அதனை  நான் அடுத்த பாது­காப்புக் கூட்­டத்தில் சமர்ப்­பித்து அவை குறித்து எடுக்­க­வேண்­டிய ஆலோ­ச­னை­களை வழங்­கினேன். அதன் பின்னர் வர்த்­தகத் துறை பிர­தா­னி­களை சந்­தித்துக் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். இந்த அனைத்து செயற்­பா­டு­களும்  நான் தனி­யாக எடுத்த தீர்­மானம் அல்ல. பிர­தமர், அமைச்­ச­ரவை, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் மற்றும் அவ­சி­ய­மான பலரை இணைத்து இந்த தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்தேன். பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் எப்­போதும் இல்­லாத வகையில் ஒவ்­வொரு சூழ்­நி­லைக்கு தேவை­யான நபர்­களை இணைத்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றேன்.  பாது­காப்பு அமைச்சின் பிர­தான பத­வி­களில் மாற்­றங்­களை செய்­துளேன். பாது­காப்பு படை­க­ளுக்கு விசேட அதி­கா­ரங்­களை கொடுத்­துள்ளேன். குற்­ற­வா­ளி­களை கைது­செய்யும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னே­டுத்­துள்ளேன். இன்று பாது­காப்பு சிறப்­பாக உள்­ளது. எனினும் விமர்­ச­னங்கள் இன்னும் உள்­ளன. ஆனால் இது குறித்து முழு­மை­யான அறி­வுடன் அனை­வரும் பேச வேண்டும்.

இந்த பிரச்­சினை இலங்­கையின் பிரச்­சினை அல்ல. இது சர்­வ­தேச பிரச்­சினை, இந்த பிரச்­சினை குறித்து பின்­னணி தெரி­யாது பலர் பேசு­கின்­றனர். கண்­மூ­டித்­த­ன­மாக இந்த பிரச்­சினை குறித்து பேசு­கின்­றனர். ஆகவே இது குறித்து அனை­வரும் முதலில் அறிந்­து­கொண்டு செயற்­பட வேண்டும். குறிப்­பாக ஊட­கங்கள் இந்த விட­யத்தில் பொறுப்­பாக செயற்­பட வேண்டும். இன்று பாது­காப்பு துறையின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பில் நாட்­டினை மீட்­டுள்ளோம் என்­பதே உண்மை. இப்­போ­து­வ­ரையில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் பலர் சந்­தேக நபர்கள். இது­வரை நேரடிக் குற்­றத்தில்  சிலர் தொடர்­பு­பட்­டுள்­ளனர். இவர்­களில் 12   பேர் முக்­கி­ய­மான பயங்­க­ர­வா­திகள். கைப்­பற்­றப்­பட்ட ஆயு­தங்­களில் குண்­டுகள் தயா­ரிக்க பயன்­ப­டுத்தும் பல பொருட்கள் அடங்­கி­யுள்­ளன. இந்த பயங்­க­ர­வா­தி­க­ளுடன்  தொடர்­பு­டைய 41 வங்கிக் கணக்­குகள் முடக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­களின் வீடுகள், சொத்­துக்கள் அனைத்தும் அரச உடை­மை­யாக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் இந்த தாக்­கு­த­லுக்கு சிறு உத­வி­களை செய்த நபர்­க­ளுக்கு  பிர­தான பயங்­க­ர­வா­தி­க­ளினால் ஒரு நப­ரிடம் 20 இலட்சம் ரூபா  வழங்­கப்­பட்­டுள்­ளன. புல­னாய்வுத் துறை­யினால் இந்த விப­ரங்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதேபோல்  15 வாக­னங்கள், 4 மோட்டார் சைக்­கிள்கள் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட வகையில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.  இந்த சம்­பவம் குறித்த மேல­திக  விசா­ரணை வெற்­றி­க­ர­மாக முன்­ன­கர்­கின்­றது.

அதேபோல் இந்த பயங்­க­ர­வாத பின்­ன­ணியை பற்றி பார்க்­கவும் வேண்டும். 9/11 தாக்­கு­தலில் அமெ­ரிக்கா மிகவும் மோச­மாக முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. பல­மான அமெ­ரிக்­கா­வினால் அதற்­கான தடுப்பு நட­வ­டிக்­கைகள் எடுக்க முடி­யா­மல்­போ­னது. அதேபோல் ஐரோப்­பாவில்  பல நாடு­களும்  இந்த அச்­சு­றுத்­த­லுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றன. இதை­யெல்லாம் அவர்­களால் தடுக்க  முடி­ய­வில்லை. மாறாக இந்த பயங்­க­ர­வா­திகள் இருக்கும் இடங்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தினர். இதில் ரஷ்யா மட்­டுமே சிறப்­பாக வெற்றி பெற்­றுள்­ளது. மேலும் நாம் 30 வரு­டங்கள் யுத்­தத்­துடன் வாழ்ந்த மக்கள். குண்­டு­க­ளுடன் வாழ்ந்­துளோம். இப்­போது இந்தத் தாக்­குதல் தான் எமது முதல் தாக்­குதல் அல்ல. இந்த நாட்டில்  6 வது  ஜனா­தி­பதி நான், எனக்கு முன்னர் இருந்த 5 ஜனா­தி­ப­தி­களின்  காலத்தில் குண்­டுகள் வெடித்­துள்­ளன. அதனை மறந்­து­விட வேண்டாம். ஆகவே இவற்றை எல்லாம் கருத்­தில்­கொண்டு செயற்­பட வேண்டும். இன்று சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­திற்கு நாம் அனை­வரும் முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். இந்த தாக்­குதல் இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்ட ஒன்­றல்ல. இந்த தாக்­கு­தலில் இயக்­குனர் எங்­கி­ருந்தோ தாம் தான் காரணம் என்றார். ஆகவே இது குறித்து நாம் கவ­ன­மாக சிந்­திக்க வேண்டும். இந்த அமைப்பின் தலைவர் கொல்­லப்­பட்­டுள்ளார் என சர்­வ­தேசம் நம்­பிக்­கொண்­டி­ருந்த போது இந்த தாக்­கு­தலின் பின்னர் மீண்டும் உரு­வா­கி­யுள்ளார் என்­ற­போது சர்­வ­தே­சமே வியப்பில் உள்­ளது.  எம்மை விட பல­மான நாடு­க­ளுக்கு இது பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­யுள்­ளது.

சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் குறித்து நான் படித்து தெரிந்த கார­ணிகள். கடந்த 10 நாட்­களில் இவற்றை நான் படித்து அறிந்­து­கொண்டேன். இந்த நான்கு எழுத்து பயங்­க­ர­வா­தத்தின் பெயரை நாம் பாவிப்­பது அவர்­களை நாம் அங்­கீ­க­ரி­கப்­பதை போன்று ஆகி­விடும். சர்­வ­தேச தலை­வர்கள் எவரும் இதனை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. நானும் அத­னையே கையாள்­கின்றேன். அதேபோல் இந்த பயங்­க­ர­வாதம் எதனை இலக்கு வைக்­கின்­றது  என்றால் இது மேற்­கத்­தேய கொள்­கைக்கு எதி­ரான போராட்டம். அமெ­ரிக்க பிர­ஜைகள், வெள்­ளை­யர்கள், கிறிஸ்­த­வர்கள் தான் இவர்­களின் இலக்­காக்கும்.  இப்­போது இலங்­கையில் தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள்  கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். நாட்­டினை பாது­காக்கும் நட­வ­டிக்­கைகள் ஒரு­புறம் இருக்­கையில் மறு­புறம் சகல அர­சி­யல்­வா­தி­களின் மூல­மா­கவும், மதத்­த­லைவர் அனை­வ­ரதும் கடமை. நாட்டின் முஸ்லிம் மக்­களை பார்த்தால் சிங்­கள மக்கள் அச்­சத்தில் உள்­ளனர். அதேபோல் முஸ்லிம் மக்­களும் அதே அச்­சத்தில் உள்­ளனர். இந்த தாக்கம் தமிழ் மக்­க­ளையும் பாதித்­துள்­ளது என­பது அறிந்­து­கொள்ள முடி­கின்­றது.

இன்று நாட்­டுக்குள் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 150க்கும் குறை­வான பயங்­க­ர­வாத நபர்கள் உள்­ள­தாக புல­னாய்வு அறிக்கை கூறு­கின்­றது. அவர்­க­ளுக்­காக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்­ளு­வதா என்­பதை யோசிக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் சகல தமி­ழரும் புலிகள் என்ற கருத்து உருப்­பெற்­றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்­பட்­டது. 83 கல­வ­ரத்தில் தமி­ழர்­களின் சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டதை அடுத்து தமிழ் இளை­ஞர்கள் புலி­களில் இணைந்­தனர். நாம் தமிழர் மீதான அவ நம்­பிக்கை கொண்­ட­மையே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. ஆகவே  இப்­போது நாம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் என தமி­ழர்­களை பார்த்­த­தைப்போல் முஸ்­லிம்­களை பயங்­க­ர­வ­திகள் என பார்க்க வேண்டாம்.  அதேபோல் எமது பாது­காப்பு படைகள் மற்றும் எமது புல­னாய்வு குறித்து நம்­பிக்கை வைத்து செயற்­பட வேண்டும். பாது­காப்பு படை­க­ளுக்கு நான் அதி­காரம் கொடுத்­துள்ளேன். நான் இன்று முழு­மை­யான அதி­கா­ரங்­களை இரா­ணு­வத்­துக்கு கொடுத்­துள்ளேன். அவர்கள் தமது கட­மையை சரி­யாக செய்து வரு­கின்­றனர். புல­னாய்வு, பாது­காப்பு படை, பொலிஸ் துறையை புனர்­நிர்­மாணம் செய்து வரு­கின்றேன். கடந்த காலங்­களில் பொலிஸ் துறைக்கு அதி­காரம் வழங்­க­வில்லை. நான் இவற்றை பொறுப்­பேற்ற பின்னர் மாற்­றி­ய­மைத்தேன். எவ்­வாறு இருப்­பினும் இன்று பாதுகாப்பு படைகள் பலமாக உள்ளன. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சகலரும் கைதுசெய்யப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் இது குறித்து நான் பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன்.

ஆனால் பயங்கரவாதம் என்பது உலகத்தில் எங்கு எப்போது உருவாகும் என்பதை எவராலும் தெரிவிக்க முடியாது. உலக தலைவர்கள் எவராலும் இதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இப்போது நாட்டில் இன ஒற்றுமையே வேண்டும். சகல மக்களுன் இணைந்து செயற்பட வேண்டும். அதனையே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அரசியல் பிரிவினை இல்லாது இதில் நாம் செயற்பட வேண்டும். ஒரு சிலர் என்னையே இந்த அமைப்பின் தலைவர் என்ற வகையில் விமர்சித்து வருகின்றனர்.ஆனால் இந்த விடயத்தில் சகலரும் இணைந்து நாட்டினை மீட்டெடுக்க வேண்டும். யாரும் யாரையும் குற்றம் சுமத்தாது நாட்டின் நிலைமையை விளங்கிக்கொண்டு மக்களுக்கு அமைதியான நாட்டினை உருவாக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.