அரபுக் கல்லூரிகள், அரபு மத்ரஸாக்களுக்கான தனியான வழிகாட்டல் சட்ட மூலம் ஒன்றை அமைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான குழுவின் அறிக்கையை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
மேற்படி அறிக்கையில், வெளிநாடுகளில் தற்போது செயற்படும் சட்டதிட்டங்களும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் பிரிவெனா கல்வி சட்டமூல் அடங்கியுள்ள கல்விக்கொள்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கமைய அரபுக் கல்லூரிகள், மத்ரஸாக்கள் பொதுவான பாடத்திட்டத்தின் கீழேயே இயங்கவுள்ளன.
சட்டமா அதிபரினதும் சட்ட மூலம் தொடர்பான உயர் அதிகாரியினதும் மீளாய்வினைப் பெற்றுக்கொண்ட பின்னர் இவ்வறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷத சில்வா, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
-Vidivelli