காஸா பள்ளத்தாக்கின் 320 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் 

0 674

இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தி­னரால் கடந்த சனிக்­கி­ழமை தொடக்கம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காஸா பள்­ளத்­தாக்கின் 320 இடங்­களில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கண்­கா­ணிப்பு மையங்கள், நிலக்கீழ் களஞ்­சி­ய­சா­லைகள், ஹமாஸ் அமைப்பின் இரா­ணுவ மத்­திய நிலை­யங்கள் மற்றும் இஸ்­லா­மிய ஜிஹாத் ஆகி­யன இலக்கு வைத்து தாக்­கப்­பட்­ட­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவப் பேச்­சா­ள­ரான அவி­சாயி அட்­ராயீ தெரி­வித்தார்.

இஸ்­ரேலின் வான் தாக்­குதல் கார­ண­மாக கடந்த சனிக்­கி­ழமை தொடக்கம் இரு கர்ப்­பிணிப் பெண்கள் மற்றும் இரு குழந்­தைகள் உள்­ள­டங்­க­லாக 25 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு 100 இற்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

ஹமாஸ் தொடர்­பு­பட்ட தளங்கள் மீது இஸ்ரேல் இரா­ணுவம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தி­ய­தனால் பதின்­ம­வ­யது இளைஞர் ஒருவர் உட்­பட 4 பலஸ்­தீ­னர்கள் உயி­ரி­ழந்து 51 பேர் காய­ம­டைந்­ததை அடுத்தும் காஸா பள்­ளத்­தாக்கு மீதான தசாப்­த­கால ஆக்­கி­ர­மிப்பு மற்றும் முற்­று­கைக்கு எதி­ரான ஊர்­வ­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லொன்­றினை அடுத்தும் காஸா பள்­ளத்­தாக்கில் மோதல்கள் தீவி­ர­மா­கின.

இஸ்­ரே­லிய குடி­யேற்றப் பகு­திகள் மீது பலஸ்தீன பகுதிகளிலிருந்து 600 எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மூவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.