நிதி சேக­ரித்து வழங்­குக

பள்­ளி­வா­சல்­க­ளிடம் உலமா சபை கோரிக்கை

0 882

நாட்டில் கடந்த 21.04.2019 ஆம் திகதி நடை பெற்ற மனி­த­ாபி­மா­ன­மற்ற தாக்­கு­தல்­களால் நாட்டு மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டதை யாவரும் அறிவோம். இந்­நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்­த­னை­களில்  ஈடு­ப­டு­மாறு அனைத்து முஸ்­லிம்­க­ளையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்­கின்­றது.

நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலை­களின் போது முஸ்­லிம்கள் அனை­வரும் தம்­மா­லான உத­வி­களை அனைத்து விதத்­திலும் செய்து வந்­துள்­ளனர்.

அதே போன்று கடந்த வாரம் தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்­காக 22.04.2019 ஆம் திகதி முதல் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்­லிம்­க­ளிடம் நிதி சேக­ரித்து வரு­கின்­றது.

எனவே, ஒவ்­வொரு மஸ்ஜித் நிரு­வா­கி­களும் எதிர்வரும் இரண்டு ஜும்ஆ தினங்­க­ளிலும் பணத்தை சேக­ரித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பின்­வரும் கணக்­கி­லக்­கத்­திற்கு வைப்­பி­லி­டு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கேட்டுக் கொள்­கி­றது.

இந்­நிதி சேக­ரிப்புத் திட்­டத்தை அழ­கிய முறையில் முன்­னெ­டுக்க எமது அனைத்து கிளை­களும் நாட்டு முஸ்­லிம்கள் அனை­வரும் மஸ்ஜித் நிர்­வா­கி­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கு­மாறும் அன்­பாகக் கேட்டுக் கொள்­கின்றோம்.

 

All Ceylon Jamiyyathul Ulama

AC NO 1901005000

Commercial Bank

IBU – Branch

Swift Code – CCEYLKLX

 

All Ceylon Jamiyyathul Ulama

AC NO 0010112110014

Amana Bank

Main Branch

Swift Code – AMNALKLX

Leave A Reply

Your email address will not be published.