புர்கா ஆடை தடையினால் முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து

சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டு

0 526

முகத்தை மூடும் புர்கா ஆடைக்கு இலங்­கையில் விதிக்­கப்­பட்­டி­ருக்கும் தடை கார­ண­மாக முஸ்லிம் பெண்கள் அவ­ம­திக்­கப்­ப­டக்­கூ­டிய ஆபத்­தி­ருப்­ப­தாக விசனம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர்­குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நடை­மு­றைக்கு கொண்டு வரப்­பட்­டி­ருக்கும் திருத்தம் செய்­யப்­பட்ட அவ­ச­ர­கால ஒழுங்­கு­வி­தி­களின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடை­க­ளுக்கு தடை­வி­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
குண்டுத் தாக்­கு­தல்­களின் விளை­வாக தங்கள் மீது பழி­வாங்கல் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டக்­கூடும் என்று பல முஸ்­லிம்கள் அஞ்­சிக்­கொண்­டி­ருக்கும் ஒரு நேரத்தில் மதக் கார­ணங்­க­ளுக்­காக முகத்தை மூடும் ஆடையை அணி­கின்ற பெண்­களை இலக்­கு­வைத்து விதிக்­கப்­பட்­டி­ருக்கும் தடை அந்தப் பெண்கள் அவ­ம­திக்­கப்­ப­டக்­கூ­டிய ஆபத்தை தோற்­று­விக்­க­லா­மென்று சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் தெற்­கா­சிய பிராந்­தி­யத்­துக்­கான பிரதிப் பணிப்­பாளர் தினு­ஷிகா திசா­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார்.

“அந்தப் பெண்கள் வெளியில் நட­மா­ட­மு­டி­யாமல் வீடு­க­ளுக்­குள்­ளேயே முடங்­கிக்­கி­டக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டுவர். வேலைக்கோ, படிக்­கவோ செல்­ல­மு­டி­யாமல் போகலாம். அடிப்­படை வச­தி­க­ளையும் அவர்கள் பெறு­வதில் கஷ்­டங்­களை எதிர்­நோக்க வேண்டி வரலாம். முகத்தை மூடும் ஆடை­மீ­தான தடை­வி­திப்பு பார­பட்­சத்­துக்கு உள்­ளா­காமல் இருப்­ப­தற்கு அந்த பெண்­க­ளுக்கு உள்ள உரி­மை­யையும் கருத்­து­வெ­ளிப்­பாட்டுச் சுதந்­திரம் மற்றும் மதச்­சு­தந்­திரம் ஆகி­ய­வற்­றையும் மீறு­வ­தாக இருக்­கி­றது” என்று திசா­நா­யக்கா கூறினார்.

நியா­ய­பூர்­வ­மான பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக அவ­சியம் ஏற்­ப­டும்­போது அதி­கா­ரிகள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் சோத­னை­களை நடத்­தலாம். மனித உரி­மை­க­ளுக்கு இணங்க அர­சாங்கம் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும். பெண்­க­ளு­டைய மத நம்­பிக்­கைகள் எவ்­வா­றா­ன­தாக இருந்­தாலும் எத்­த­கைய உடையை தாங்கள் அணியவேண்டும் என்று தீர்மானிப்பதற்கான உரிமை பெண்களுக்கு இருக்கிறது. முகத்தை மூடும் ஆடையை அகற்றுமாறு பெண்களை வலுக்கட்டாயமாக கேட்பது அவர்களை அவமதிப்பதாகும். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திசாநாயக்கா குறிப்பிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.