அரச வர்த்தமானியில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

ஹிஜாப் விவகாரம் தொடர்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் பிரதமர் உறுதி

0 571

நாட்டின் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக முஸ்லிம் பெண்கள் முகம் மூடி அணியும் ஆடைக்குத் தடை விதித்து கடந்த 29 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அர­சாங்க வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சமூகப் பிர­தி­நி­தி­க­ளிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்த அமைச்­சர்கள் கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாசிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் உள்ளிட்ட குழு­வினர் முஸ்லிம் பெண்கள் முகம் மூடி அணியும் ஆடைக்கு தடை விதித்து ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ள அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்தல் முஸ்லிம் மக்கள் மத்­தியில் குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லையைத் தோற்­று­வித்­துள்­ள­தாக முறைப்­பாடு செய்­தனர்.

குறித்த அர­சாங்க வர்த்­த­மானி வெளி­யீடு ‘முழு முகம்’ என்­ப­தற்கு ஒரு­வரின் இரு காது­க­ளையும் மறைக்கக் கூடாது என வரை­வி­லக்­கணம் வழங்­கப்­பட்­டி­ருப்­பதால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய முடி­யுமா? முடி­யாதா? எனும் குழப்­ப­நி­லைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என விளக்­கி­னார்கள்.
முஸ்லிம் சமூகப் பிர­தி­நி­தி­க­ளிடம் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை பற்­றிய தெளி­வு­களைப் பெற்­றுக்­கொண்ட பிர­தமர் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அர­சாங்க வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாகத் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.