பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ‘பைரஹா’ 1.5 மில்லியன் நிதி அன்பளிப்பு

0 554

அண்­மையில் பயங்­க­ர­வா­தி­களின் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக 15 இலட்சம் ரூபா நிதியை இலங்­கையில் உள்ள முன்­னணி நிறு­வ­னங்­களில் ஒன்­றான பைரஹா தனியார் நிறு­வனம் அன்­ப­ளிப்பு செய்­துள்­ளது.

இதில் 10 இலட்சம் ரூபா நிதிக்­கான காசோ­லையை கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­யிடம் நேற்று முன்­தினம் கர்­தினால் இல்­லத்தில் வைத்து சீனன் கோட்டை பள்ளிச் சங்க பிரதித் தலை­வரும் பைரஹா நிறு­வன முகா­மைத்­துவ பணிப்­பா­ள­ரு­மான யாகூத் நளீம் கைய­ளித்தார்.
பயங்­க­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான மனி­தா­பி­மா­ன­மற்ற இந்த தாக்­கு­தலை யாகூத் நளீம் வன்­மை­யாக கண்­டித்­த­தோடு சம்­ப­வத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்­காக அனு­தா­பத்­தையும் தெரி­வித்துக் கொண்டார்.
இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கும் கிறிஸ்­தவ மக்­க­ளுக்கும் இடையில் நீண்ட கால­மாக இருந்து வரும் ஒற்­றுமை குறித்தும் இதன்­போது அவர் சுட்டிக் காட்­டினார். இச்­சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக பைரஹா நிறு­வனம் இந்த நிதி­யு­த­வியை வழங்­கு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இதன்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவி செய்ய முன்­வந்த பைரஹா தனியார் நிறு­வ­னத்­திற்கு நன்றி தெரி­விப்­ப­தாக கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

பைரஹா நிறு­வன ஸ்தாப­க­ரான காலம் சென்ற எம்.ஐ.எம் நளீம் ஹாஜி­யா­ருடன் தனக்­கி­ருந்த நீண்ட கால மிக­நெ­ருங்­கிய தொடர்­பினை ஞாப­கப்­ப­டுத்­திய கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை, தான் பேரு­வளை பகு­தியை சேர்ந்­தவர் என்­ப­தையும் நளீம் ஹாஜி­யாரின் இன, மத பேத­மற்ற நற்­சே­வை­க­ளையும் இதன்­போது நினைவு கூர்ந்தார்.

இதே­வேளை நீர்­கொ­ழும்பு, கட்­டானை கத்­தோ­லிக்க தேவா­லய தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக 5 இலட்சம் ரூபா நிதியை ஏலவே மற்­றொரு நிகழ்வில் பைரஹா நிறு­வ­னத்தின் சார்பில் அதன் தலைவர் யாகூத் நளீம் கைய­ளித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு மேல­தி­க­மாக தாக்­குதல் சம்­ப­வத்தில் தாய் தந்­தை­களை இழந்த கட்­டான பகு­தியைச் சேர்ந்த 5 பாட­சாலை சிறார்­க­ளுக்கு அவர்­க­ளது கல்விப் பணி முடி­யும்­வரை புல­மைப்­ப­ரிசில் பெற்றுக் கொடுக்­கவும் பைரஹா தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந் நிதியை கையளிக்கும் நிகழ்வில் பைரஹா நிறைவேற்று பணிப்பாளர் ரியால் யாகூப், விற்பனை சேவை பொது முகாமையாளர் கிளவர் பெர்னாந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.