காத்தான்குடி வாழ் மக்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் ஒருசிலரின் செயலால் வெட்கமும் கவலையும் அடைகிறோம்

காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவிப்பு

0 616

எவ்­வ­கை­யான தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளையும் காத்­தான்­குடி பொது மக்கள் எச் சந்­த­ரப்­பத்­திலும் ஏற்றுக் கொள்­ள­வில்­லை­யென காத்­தான்­குடி சிவில் சமூக அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் நேற்று முன்­தி­னம் நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) தெரி­வித்தார். இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு காத்­தான்­குடி பீச்வே ஹோட்டல் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரி­வித்த அவர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற தற்­கொ­லைத்­தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட பிர­தான நபர் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­தவன் என்ற வகையில் பொது­வாக நாடு முழு­வ­திலும் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள ஒரு அச்ச நிலை தொடர்­பிலும் சந்­தேகப் பார்வை தொடர்­பிலும் பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பாட்­டினை நாம் கொண்­டுள்ளோம்.

இத்­தாக்­கு­தலுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணக் கூடி­ய­வர்­க­ளே­யாகும். அவர்­க­ளி­னது எவ்­வ­கை­யான தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளையும் காத்­தான்­குடி பொது மக்கள் எச் சந்­த­ர்ப்­பத்­திலும் ஏற்றுக் கொள்­ள­வில்லை என்­ப­தா­லேயே இத்­தாக்­குதல் சம்­ப­வங்­களில் பிர­தான சூத்­தி­ர­தா­ரியும் அவ­ருடன் தொடர்­பு­பட்ட ஒரு சிலரும் 2017 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியை விட்டு தலை­ம­றை­வா­கினர். அத்­தோடு அவர்­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கு­க­ளுக்கு ஆஜராகாது ஒளிந்து வாழ்ந்­தார்கள் என்­ப­த­னையும் இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றோம்.

நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணி சமா­தான சக வாழ்­வினை இந் நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் சம­யங்­க­ளுக்­கூ­டாக கட்­டி­யெ­ழுப்ப கடந்த காலங்­களைப் போலவே எதிர்­கா­லத்­திலும் எமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டவும் இத்­த­ரு­ணத்தில் காத்­தான்­குடி மக்­க­ளா­கிய நாம் உறு­தி­பூ­ணு­கின்றோம்.

இஸ்­லாத்தின் பெயரால் இத்­தாக்­கு­தலை முன்­னெ­டுத்த ஐ.எஸ்.பயங்­க­ர­வாத அமைப்­பினர் எம­தூரைச் சேர்ந்­த­வர்­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யை­யிட்டு நாம் வெட்கித் தலை குனி­கின்றோம்.

இலங்கை முஸ்­லிம்கள் கடந்த 30 வரு­ட­கால யுத்­தத்­திலும் யுத்­தத்­திற்கு பின்­னரும் பல்­வேறு படு­கொ­லைகள், இழப்­புக்கள், பல­வந்த வெளி­யேற்­றங்­களை சந்­தித்த போதிலும் ஒரு போதும் வன்­மு­றை­யினை நாட­வில்லை என்­ப­தனை பொறுப்­புடன் ஞாப­க­மூட்ட விரும்­பு­கின்றோம்.

அவ்­வாறே இஸ்­லாத்தைப் பொறுத்­த­வ­ரையில் மத விட­யத்தில் பலாத்­காரம் இல்லை என்­பன போன்ற வழி­காட்­டல்­க­ளையே அல்­குர்ஆன் எமக்குப் போதிக்­கின்­றது. இதற்கு மாற்­ற­மான வன்­மு­றையை இஸ்லாம் ஒரு போதும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அந்­த­வ­கையில் கடந்த 21.04.2019 ஞாயிற்றுக் கிழமை இடம்­பெற்ற மதத்தின் பெய­ரி­லான மிலேச்­சத்­த­ன­மான வன்­மு­றை­களை இலங்கை முஸ்­லிம்கள் சார்­பா­கவும் குறிப்­பாக காத்­தான்­குடி முஸ்­லிம்கள் சார்­பா­கவும் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

இலங்கை வர­லாற்றில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மற்­று­மொரு இரத்தக் கறை­ப­டிந்த நாளாகும். கத்­தோ­லிக்க மக்­களின் புனித தின­மான உயிர்த்த ஞாயிறு தினத்தில் திட்­ட­மிட்டு தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட கோழைத்­த­ன­மா­னதும் மிலேச்­சத்­த­ன­மா­ன­து­மான இக்­குண்டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி உயிர்­நீத்த இலங்­கை­யர்கள், வெளி­நாட்­ட­வர்கள், பாது­காப்பு தரப்­பினர் அனை­வ­ருக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்துக் கொள்­கின்றோம்.
இத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் அனை­வரும் மிக­வி­ரை­வாக குண­ம­டைய இறை­வனைப் பிரார்த்­திக்­கின்றோம். இக் கோழைத்­த­ன­மா­னதும் மிலேச்­சத்­த­ன­மா­ன­து­மான தாக்­குதல் சம்­ப­வங்­களில் தமது உற­வு­களை இழந்து துய­ருறும் உங்கள் அனை­வ­ரது துன்­பத்­திலும், துய­ரத்­திலும் நாங்­களும் பங்­கு­கொள்­கின்றோம்.

போர் முடி­வுக்கு வந்த பின்னர் இலங்­கையில் மீண்டும் குண்டு வெடிப்­புக்கள், மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பான அச்­சத்தை விதைத்துச் சென்­றுள்ள இத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் மனித குலத்­திற்கு விரோ­த­மா­ன­வை­யே­யாகும்.
இலங்­கையின் அமை­தி­யையும் பல்­லினத் தன்­மை­யையும் சகிக்க முடி­யாத சர்­வ­தேச தீவி­ர­வாத சக்­தி­களின் சதி­வ­லை­களில் சிக்­கிய குறிப்­பிட்ட சில­ரது இந்த தீவி­ர­வாத செயல் இலங்­கையை மீண்டும் அச்­சத்­திற்­குள்ளும் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தே­கத்­தோடும், பயத்­தோடும் நோக்கும் நிலையை தோற்­று­வித்­துள்­ள­மை­யை­யிட்டு நாம் பெரிதும் கவ­லை­ய­டை­கின்றோம்.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்கள் என்­ற­வ­கையில் இத்­தாக்­குதல் சம்­ப­வங்­களில் பெரிதும் பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க சகோ­தர சகோ­த­ரி­களை அமை­திப்­ப­டுத்தி, முஸ்­லிம்­களை நோக்கி விரும்­பத்­த­காத நட­வ­டிக்­கைகள் எதுவும் இடம்­பெற்­று­வி­டாமல் இருக்­கவும் ஒட்டு மொத்த முஸ்­லிம்­க­ளையும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தாமல் இருக்­கவும் வழி­காட்­டிய பேராயர் மதிப்­பிற்­கு­ரிய மல்கம் ரஞ்சித் அவர்­க­ளுக்கும், மட்­டக்­க­ளப்பு கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யி­ன­ருக்கும் எமது மன­மார்ந்த நன்­றி­களை இச்­சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

இதே­வேளை இலங்­கையின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் வியா­பார நிமித்­தமும் கல்­விசார் நட­வ­டிக்­கை­ளுக்­கா­கவும், தனிப்­பட்ட தேவை­க­ளுக்­கா­கவும் வாழும் சமா­தா­னத்­தையும் , அமை­தி­யையும் விரும்பும் காத்­தான்­குடி வாசி­க­ளுக்கு எவ்­வித இடை­யூ­று­களும் ஏற்­ப­டாத வண்ணம் செயற்­ப­டு­மாறு, சந்­தேகம் ஏற்­ப­டு­மி­டத்து அதனை உரிய சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கூ­டாக கையா­ளு­மாறும் எச்­சந்­தர்ப்­பத்­திலும் வன்­மு­றையை கையி­லெ­டுக்க வேண்டாம் என்றும் இலங்கை பிர­ஜைகள் அனை­வ­ரையும் இப்­பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்­டி­னூ­டாக மிக வின­ய­மாகக் கேட்டுக் கொள்­கின்றோம். விரும்­பத்­த­காத இச்சம்பவங்கள் நமது இலங்கை தாய் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள அழிவு, பொருளாதார வீழ்ச்சி என்பவற்றிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கையர்கள் என்றவகையில் உங்கள் அனைவருடனும் காத்தான்குடி மக்களாகிய நாமும் கைகோர்க்கத் தயாராய் உள்ளோம் என்பதனையும் அதற்கு எதிராக எழும் அனைத்து வகையான சவால்களையும் முறியடிக்க உங்கள் அனைவருடனும் கைகோர்க்கின்றோம் என்பதனையும் இப்பத்திரிகையாளர் மாநாட்டிற்கூடாக தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வமைப்பின் செயலாளர் எம்.ஏ.சி.எம். ஜவாஹிர், உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.உவைஸ், யூ.எல்.எம்.என்.முபீன் உட்பட உலமாக்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.