தயாசிறியின் கருத்து அபாண்டமான பொய்

வக்பு சபையின் தலைவர் குற்றச்சாட்டு

0 556

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் 400 க்கும் மேற்­பட்ட தௌஹீத் பள்­ளி­வா­சல்­களைப் பதிவு செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார் என ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தி­ருப்­பது அபாண்­ட­மான பொய்­யாகும். அர­சி­யல்­வா­திகள் இவ்­வா­றான பொய்­களைக் கூறி நாட்டைத் தீயிட முயற்­சிக்­கக்­கூ­டாது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார்.

2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் 400 க்கும் மேற்­பட்ட தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார். கண்டி மாவட்­டத்தில் மாத்­திரம் இவ்­வா­றான 50 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர குற்றம் சுமத்­தி­யுள்­ளமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘2015 ஆம் ஆண்டின் பின்பு சட்ட ரீதி­யற்ற முறையில் பதிவு செய்­யப்­ப­டாது இயங்­கிய பள்­ளி­வா­சல்கள் தேவை­யான ஆவ­ணங்­களைப் பெற்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அவ்­வாறு பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் எவ்­வாறு கூற முடியும். பள்­ளி­வா­சல்கள் அனைத்­தையும் பதிவு செய்து அவற்றை நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரு­வ­தையே வக்பு சபையும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் செய்­துள்­ளது. தயா­சிறி ஜய­சே­கர படித்­தவர். எனது நெருங்­கிய நண்பர். அவர் இவ்­வா­றான பொய் பிர­சா­ரங்­களை மேற்­கொள்ள முன்பு என்­னிடம் தெளி­வு­களைப் பெற்றுக் கொண்­டி­ருக்­கலாம்.

பள்­ளி­வா­சல்கள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களின் பதி­வு­களில் மேலும் சட்ட ரீதி­யான விட­யங்­களை உட்­பு­குத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளும் வகையில் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெ­று­கின்­றன. புத்­தி­ஜீ­வி­களின் ஆலோ­ச­னைகள் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

பள்­ளி­வா­சல்கள் அனைத்தும் பதிவு செய்­யப்­பட்டு ஒரு சட்ட வரம்­புக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­மைக்கு அர­சாங்கம் பாராட்டுத் தெரி­விக்க வேண்டும். பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்தால் ஏதும் சந்­தே­கங்கள் ஏற்­படும் போது பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தையும் பொறுப்­பா­ளர்­க­ளையும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த முடியும்.

தீவி­ர­வாத செயல்­களைப் புரிந்­துள்­ள­வர்கள் அரபு மத்ரஸாக்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் என குற்றம் சுமத்த முடியாது. தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் அரபுக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவரல்ல. அவர் அரபுக் கல்லூரியிலிருந்து இடை நடுவில் விலக்கப்பட்டவர்’ என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.