முகத்தை முழு­மை­யாக மறைக்­கவும் தீவி­ர­வாத பிர­சா­ரத்தில் ஈடு­ப­டவும் தடை

வெளிநாட்டவர்களும் மத பிரசாரங்களில் ஈடுபட முடியாது

0 572

நாட்டின் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடை­களை அணி­வது நேற்று முன்­தினம் முதல் தடை­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் விரி­வாக விளக்கும் விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள 2120/5 ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி
அறி­வித்­த­லா­னது முகத்தை மறைத்து ஆடை அணி­வதை தடை செய்­வது தொடர்­பிலும் இலங்கைப் பிர­ஜை­களோ அல்­லது வெளி­நாட்­ட­வரோ இலங்­கையில் தீவி­ர­வாத சிந்­த­னை­களை போதிப்­பது தொடர்பில் தடை­களை விதிப்­பது குறித்தும் விப­ரிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

இதற்­க­மைய ஒரு­வ­ரது அடை­யா­ளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்­தையும் மூடக் கூடிய எந்­த­வொரு ஆடை­யையும் பொது இடங்­களில் அணிய முடி­யாது. முழு முகம் என்­பது, ஒரு­வ­ரது காதுகள் உள்­ளிட்ட முழு முகத்­தையும் குறிப்­ப­தாக அமையும். பொது இடம் எனக் குறிப்­பி­டு­வது, பொது வீதிகள், கட்­ட­டங்கள், அடைக்­கப்­பட்ட அல்­லது திறந்த வெளிகள், வாக­னங்கள் அல்­லது ஏனைய போக்­கு­வ­ரத்து சாத­னங்­களைக் குறிப்­ப­தாக அமையும். பொது வீதிகள் என்­பது, பொது வீதி­க­ளுடன் தொடர்­பு­படும் பொதுப் பாலத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடை­பா­தைகள், வாய்க்கால், -ஏரிக்­கரை, சாக்­கடை என்­ப­வற்­றையும் உள்­ள­டக்கும். இதேவேளை எந்­த­வொரு நபரும் மத அல்­லது ஏதே­னு­மொரு தீவி­ர­வாத கருத்­தினை போதிப்­பது பரப்­பு­வது ஊக்­கு­விப்­பது அல்­லது ஏதே­னு­மொரு தீவி­ர­வாத செயலை ஊக்­கு­விப்­பது மற்றும் அதில் ஈடு­ப­டு­பதும் இவ் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் இலங்கைப் பிர­ஜை­யல்­லாத ஒருவர், ஆசி­ரி­ய­ராக விரி­வு­ரை­யா­ள­ராக, பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்து மத அல்­லது ஏதே­னு­மொரு தீவி­ர­வாத கருத்­தினை போதிப்­பது,பரப்­பு­வது, ஊக்­கு­விப்­பது அல்­லது ஏதே­னு­மொரு தீவி­ர­வாத செயலை ஊக்­கு­விப்­பது மற்றும் அதில் ஈடு­ப­டு­வதும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இலங்கைப் பிர­ஜை­யல்­லா­த­வர்கள் மத, தீவி­ர­வாத கருத்­துக்­க­ளுடன் தொடர்­பு­டைய கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதும் தடை செய்­யப்­பட்­ட­தாகும். இவ்­வா­றான மேற்­படி செயற்­பா­டு­களில் எவ­ரேனும் ஈடு­ப­டு­வது தொர்பில் அப் பகுதி கிராம சேவ­க­ருக்கு தகவல் கிடைக்­கு­மி­டத்து அவர் உட­ன­டி­யாக அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­திற்கு அது குறித்து தெரி­யப்­ப­டுத்த வேண்டும்.

அத்­துடன் மேற்­படி செயற்­பா­டு­க­ளுக்கு உத­வி­ய­ளிப்­பதும் மேற்­பார்வை செய்­வதும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்­கையில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களில் சிக்கி 253 பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வங்­களைத் தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அவ­சர காலச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், தற்­போது அதன் கீழ் மேற்­படி தடை­களை விதித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதற்­கி­டையில் முறை­யான விசா அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி நாட்டில் தொழில் புரியும் வெளி­நாட்­ட­வர்­களை உட­ன­டி­யாக வெளி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு உள்­ளக உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளு­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திற்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். முறை­யான விசா அனு­மதிப் பத்­திரம் இன்றி நாட்­டி­லுள்ள மத பாட­சா­லை­க­ளிலும் சில நிறு­வ­னங்­க­ளிலும் வெளி­நாட்­ட­வர்கள் பணி­யாற்­று­வ­தாக கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களை அடுத்து இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் வஜிர அபேவர்த்தன, முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.