முழு முஸ்லிம் சமூகம் மீதும் குற்றம் சுமத்த முடியாது

முறைப்பாடு குறித்து கவனம் செலுத்தாதது தவறு என்கிறார் மஹிந்த

0 566

‘உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தீவி­ர­வா­தி­களின் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் குற்றம் சுமத்த முடி­யாது. தீவி­ர­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் ஏற்­க­னவே முறைப்­பா­டு­களைச் செய்­தி­ருந்தும் அர­சாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை’ என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

கொழும்பு விஜே­ராம மாவத்­தை­யி­லுள்ள எதிர்க்­கட்சித் தலை­வரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்ற அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், இந்த தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தலை முன்­வைத்து எதிர்க்­கட்சி எவ்­வ­கை­யி­லான அர­சியல் லாபமும் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்க மாட்­டாது.

எதிர்க்­கட்சி அர­சியல் லாபம் பெற்றுக் கொள்­வ­தென்றால் அநேக சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன. ஆனால் எதிர்க்­கட்சி இவ்­வா­றான சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­துக்கு பூரண ஒத்­து­ழைப்­பையே வழங்கி வரு­கி­றது.

அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்­டி­ய­வை­களை எதிர்க்­கட்­சி­யினால் மேற்­கொள்ள முடி­யாது. நாட்டில் சிங்­க­ளவர், தமிழர் மற்றும் முஸ்­லிம்கள் ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்கள் இந்­நாட்டில் ஒன்­றி­ணைந்து வாழ்ந்த கலா­சாரம் குண்­டு­க­ளினால் அழி­வுக்­குள்­ளா­கி­யுள்­ளது. தேவை­யான போது வெளி­நா­டு­களின் உத­வி­களைப் பெற்­றுக்­கொண்­டாலும் எமது உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களை நாமே தீர்த்­துக்­கொள்ள வேண்டும். தற்­போது அழி­வுக்­குள்­ளா­கி­யுள்ள நல்­லி­ணக்­கத்­தையும், சக வாழ்­வி­னையும் நாங்கள் மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யுள்­ளது என்றார்.

நல்­லி­ணக்­கத்­தையும், இன நல்­லு­ற­வி­னையும் மீண்டும் கட்­டி­யெ­ழுப்பி அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை எதிர்­காலத் திட்­டங்­களை வகுத்து தன்­னிடம் கைய­ளிக்­கு­மாறும் தேவை­யான அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் தான் வழங்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள் அங்கு கருத்து தெரி­விக்­கையில், தாங்கள் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக இருந்து 30 வருட கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்து நாட்டில் இடம்­பெற்ற தீவி­ர­வா­தத்­துக்கு முற்றுப் புள்ளி வைத்­தவர், பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­பதில் தங்­க­ளுக்கு நிறைந்த அனு­ப­வ­முண்டு.

இலங்கை முஸ்­லிம்கள் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்கள். நாட்டை நேசிப்­ப­வர்கள். ஐ.எஸ். தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பல சிவில் சமூக அமைப்­புக்­க­ளுடன் இணைந்து பிர­க­டனம் வெளி­யிட்­டுள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு எதி­ராக முஸ்­லிம்கள் ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. ஆயு­தங்கள் ஏந்­த­வில்லை. ஒரு சிறு குழு­வி­னரே இந்த தீவி­ர­வாத செயல்­களை நிகழ்த்­தி­யுள்­ளார்கள். பாது­காப்புப் பிரிவின் மீது எமக்கு முழு நம்­பிக்கை இருக்­கி­றது. தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக முஸ்­லிம்கள் தொடர்ந்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள் என்­றார்கள்.

எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­ட­னான இந்தச் சந்­திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, ஊடக செயலாளர் பாசில் பாரூக், இளைஞர் விவகார செயலாளர் அரபாத் நூராமித், அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம், மௌலவி ஏ.எல்.நவ்பர் உட்பட உலமாக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, பிரியங்கர ஜயரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.