அவசர கால சட்டம் நீங்கும்போது புர்காவுக்கான தடையும் நீங்கும்

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டு

0 1,251

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா ஆடைக்­கான தடை தற்­போது நாட்டில் அமு­லி­லுள்ள அவ­ச­ர­கால சட்­ட­வி­தி­களின் கீழேயே ஜனா­தி­ப­தி­யினால் விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­கால சட்ட விதிகள் முடி­வுக்கு வந்­ததும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­விடும் என தெரி­வித்த அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் கூறினார்.

நாட்டில் தற்­போது நிலவும் பிரச்­சி­னைகள் தீர்ந்­ததன் பின்பு அவ­ச­ர­கால சட்டம் முடி­வுக்கு வரு­மென்றும் அவர் தெரி­வித்தார்.

நேற்று அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலை­மை­யி­லான குழு­வுக்கும் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது. அமைச்சர் ஹலீம் தலை­மை­யி­லான குழுவில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், வக்பு சபையின் தலைவர் எஸ்.எம்.எம். யாசீன், சட்­டத்­த­ரணி இல்யாஸ் ஆகியோர் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.

இச்­சந்­திப்­பின்­போது, அவ­ச­ர­கால நிலை­மையின் கீழேயே புர்­கா­வுக்கு தடை­வி­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் முஸ்லிம் சமூ­கமும், மதத்­த­லை­வர்­களும், அர­சியல் தலை­வர்­களும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடை தொடர்பில் தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்­ள­வேண்­டு­மெ­னவும் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய வேண்­டிக்­கொண்டார்.

முஸ்லிம் சமூ­கத்தில் சிறிய எண்­ணிக்­கை­யா­னோரே முகத்தை மூடி அணியும் ஆடை­யினை அணி­கின்­றனர். எனவே அவர்கள் சமூ­கத்­தி­னதும், ஏனைய இன­மக்­க­ளி­னதும் பாது­காப்பு கருதி அவ் ஆடையைத் தவிர்த்­துக்­கொள்­வது நல்­லது என அமைச்சர் ஹலீம் தெரி­வித்தார்.

இதே­வேளை நாட்டில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­களின் செயற்­பா­டுகள் மற்றும் இஸ்­லா­மிய இயக்­கங்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய அமைச்சர் ஹலீ­மிடம் விளக்­கங்­களைக் கோரினார். முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா தொடர்பில் நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இதே­வேளை நேற்று முன்­தினம் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, சூரா கவுன்ஸில் மற்றும் அமைச்சர் ஹலீம் என்­போ­ருக்­கி­டையில் புர்கா தடை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. மக்­களின் பாது­காப்பு கருதி முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வதை தவிர்த்துக் கொள்­வது நல்­லது எனத் தெரி­வித்த அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை புர்­காவை சட்ட ரீதி­யாக தடை செய்­யத்­தே­வை­யில்லை. புர்கா அணிவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சமூகத்தை தெளிவுபடுத்துவதாகவும் அதற்கு காலஅவகாசம் கோரியது.

கால அவகாசம் வழங்குவதை நிராகரித்த அமைச்சர் தலதா அத்துகோரள நோன்புக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.