தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்­பி­னர்­க­ளிடம் விசா­ரணை

0 758

தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தற்­போ­தைய தலைவர் உட்­பட அதன் சில உறுப்­பி­னர்­க­ளிடம் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக காத்­தான்­குடி பொலிசார் தெரி­வித்­தனர்.

தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தற்­போ­தைய தலை­வ­ரா­கவும் அப்­பள்­ளி­வா­சலின் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டு வரும் மௌலவி எமம்.வை..எம்.தௌபீக் உட்­பட ஜமா­அத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்­பி­னர்­க­ளையும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை விசா­ர­ணை­க­ளுக்­காக காத்­தான்­குடி பொலிசார் அழைத்துச் சென்­றுள்­ளனர். உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உட்­பட பொலிஸ் அதி­கா­ரிகள் குழு புதிய காத்­தான்­கு­டி­யி­லுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்­ளி­வா­ச­லுக்கு சென்றே இவர்­களை விசா­ர­ணைக்­காக அழைத்துச் சென்­றுள்­ளனர். இவர்­க­ளிடம் தொட­ரான விசா­ர­ணைகள் இடம் பெற்­று­வ­ரு­வ­தாக காத்­தான்­குடி பொலிசார் குறிப்­பிட்­டனர். தேசிய தௌஹீத் ஜமாஅத் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.