இவ்வருட முடிவுக்குள் துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் ஈராக்கிற்கு விஜயம் செய்வார் என துருக்கிய வெளிநாட்டமைச்சர் மெவ்லட் கவுசொகுலு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.
இவ்வருடம் முடிவடைவதற்குள் நான்காவது உயர்மட்ட தந்திரோபாய ஒத்துழைப்பு சபையின் சுட்டத்தை நடத்துவதற்காக துருக்கிய ஜனாதிபதி ஈராக்கிற்கு விஜயம் செய்வார் என துருக்கிய வெளிநாட்டமைச்சர் மெவ்லட் கவுசொகுலு ஈராக் வெளிநாட்டமைச்சர் மொஹமட் அலி அல்-ஹாகிமுடன் இணைந்து ஈராக்கியத் தலைநகர் பக்தாதில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இரு தரப்பு உறவுகளை விருத்தி செய்ய வேண்டியது அடிப்படையானதாகும் எனத் தெரிவித்த கவுசொகுலு இரு உயர்மட்ட இராஜதந்திரிகளும் இரு தரப்பு உறவுகளின் அனைத்துப் பரிமாணங்கள் தொடர்பில் கலந்துரையாடியதோடு பிராந்தியப் பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறியதாகவும் தெரிவித்தார்.
பிராந்தியப் பிரச்சினைகள் தொடர்பில் இரு நாடுகளின் கருத்துக்களும் ஒரே மாதிரியானவை எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli