பயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராய கோத்தா தலைமையில் பாதுகாப்பு படையணி

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள், முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் இணைவு

0 671

பயங்­க­ர­வாத ஊடு­ருவல் நகர்­வுகள் குறித்து ஆரா­யவும் பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வது குறித்து ஆரா­யவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தா­பய ராஜபக் ஷ தலை­மையில் முன்னாள் பாது­காப்பு பிர­தா­னி­க­ளையும் மற்றும் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளையும் ஒன்­றிணைத்த குழு­வொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அத்துடன் இரண்டு நாட்­களில் அறிக்­கை­யொன்றை ஜனா­தி­ப­திக்கு வழங்­கவும் தீர்­மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்­போ­துள்ள நிலை­மைகள் குறித்தும் பாது­காப்பு பல­வீ­னத்­தன்மை மற்றும் எவ்­வா­றான நகர்­வு­களை கையாண்டு பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வது என்ற கார­ணி­களை ஆராயும் வகையில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் தலை­மையில் முன்னாள் பாது­காப்பு உயர் பிர­தா­னிகள் குழு­வுடன் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று முன்­தினம் இரவு  விசேட  சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தார். கொழும்பு விஜ­ய­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள தனது இல்­லத்தில் எதிர்க்­கட்சி தலைவர் இந்த சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார்.  முன்னாள் பாது­காப்பு தள­ப­திகள் மற்றும் புல­னாய்வு அதி­கா­ரிகள் ஆகி­யோரின் அனு­ப­வங்­களை பயன்­ப­டுத்தி தற்­போ­துள்ள நிலை­மை­களை ஆராய  இதன்­போது தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நாட்டின் நிலை­மை­களை உட­ன­டி­யாக அறி­யத்­தர எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ பணித்­துள்ளார்.

இதில் பாது­காப்பு பிர­தானி ஜகத் ஜய­சூ­ரிய, முன்னாள் இரா­ணுவ தள­பதி தயா ரத்­நா­யக, முன்னாள் விமா­னப்­படை தள­பதி ரொஹான் குண­தி­லக, முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­ன­கொட, அட்­மிரல் மொஹான் விஜே­விக்­கி­ரம, அட்­மிரல் ஜகத் கொலம்­பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பால­சூ­ரிய, சந்­திரா பெர்­னாண்டோ, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வாகிஷ்ட, முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி ஆகியோர் உள்­ள­டங்­கிய வகை­யிலே இந்த குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் முன்னாள் புல­னாய்­வுத்­துறை உயர் அதி­கார்கள் சிலரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்­களும் குறித்த கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

இந்தக் குழு நிலை­மை­களை ஆராய்­வ­துடன் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் குறித்த அறிக்­கையில், இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மற்றும் இலங்­கைக்குள் இனியும் செயற்­பட முயற்­சிக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் குழுக்கள், மத­வாத அமைப்­புகள் குறித்தும் முழு­மை­யான அறிக்கை ஒன்­றினை தயா­ரிக்­க­வுள்­ளது. அடுத்த இரண்டு நாட்­களில் இந்த குழு நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் தமது இர­க­சிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது.   தேசிய  பாது­காப்பை  முதன்­மைப்­ப­டுத்­திய வேலைத்­திட்­ட­மாக இது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன்  இது குறித்த அறிக்­கையை ஜனா­தி­ப­திக்கும் பாது­காப்பு பிர­தா­னி­க­ளுக்கும் வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் இரு­வரும் ஜனா­தி­ப­தியை சந்­தித்து அடுத்த இரண்டு நாட்­களில் இந்த வேலைத்­திட்டம் குறித்த முழு­மை­யான தெளி­வு­ப­டுத்­தலை முன்­னெ­டுக்­க­வுள்­ளனர். தற்­போ­துள்ள பாது­காப்பு தரப்பின் செயற்­பா­டு­க­ளுடன் இணைந்து செயற்­ப­டாத வகை­யிலும் எனினும் புலனாய்வுத்துறை உதவிகளையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ள அரசாங்கத்தின் ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யுத்த காலத்தில் புலனாய்வு சேவையில் ஈடுபட்ட நபர்களை இதன்போது பயன்படுத்திக் கொள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தீர்மானம் எடுத்துள்ளார் என்பதும் அறிந்துகொள்ள முடிகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.