அவசரகால கட்டளையின் கீழ் முகத்திரைக்கு நாட்டில் தடை

ஜனாதிபதி மைத்திரி நடவடிக்கை

0 847

மக்­களின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த தடை­யாக அமையும் முகத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய மற்றும் மக்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யக்­கூ­டி­யதும் நாட்­டினுள் மக்­களின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தடை­யாக அமை­யக்­கூ­டி­ய­து­மான அனைத்து வகை­யான முகத்­தி­ரை­க­ளையும் பயன்­ப­டுத்­து­வதை உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகையில் அவ­ச­ர­கால கட்­ட­ளையின் கீழ் தடை­செய்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வதில் அடிப்­படை அள­வீ­டாக உள்ள நப­ரொ­ரு­வரின் முகத்தை தெளி­வாகக் காணக்­கூ­டி­ய­தா­யி­ருப்­பது அவ­சி­ய­மாகும் என்­பது இந்த கட்­ட­ளையின் மூலம் மேலும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்­திற்­கொண்டு, எந்­த­வொரு சமூகப் பிரி­வையும் அசௌ­க­ரி­யத்­திற்­குள்­ளாக்­காத வகையில் அமை­தி­யா­னதும் நல்­லி­ணக்­க­மா­ன­து­மான சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.