எமது பிர­தேச முஸ்­லிம்கள் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே பயங்­க­ர­வாத குழு சிக்­கி­யது

ஜனா­ஸாக்­களை பொறுப்­பேற்­க­மாட்டோம் என்றும் சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் தெரி­விப்பு

0 683

கடந்த 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தில் நடை­பெற்ற அசம்­பா­விதம் தொடர்­பாக மக்­க­ளுக்கும், நாட்­டிற்கும் விழிப்­பூட்டும் வகையில் சாய்ந்­த­ம­ருது – மாளி­கைக்­காடு ஜும்ஆப் பெரிய பள்­ளி­வாசல், உலமா சபை, வர்த்­தக சங்கம் என்­பன இணைந்து அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளன.

வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் 6.15 மணி­ய­ளவில் சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தின் B 183 ஆவது இலக்க வீட்டில் வாட­கைக்கு அமர்ந்­தி­ருந்த சாய்ந்­த­ம­ருது அல்­லாத வெளிப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த சிலர் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் செயற்­ப­டு­வ­தாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்து, குறித்த பள்ளி நிரு­வா­கத்­தி­னரும், அப்­பி­ர­தேச கிராம சேவை உத்­தி­யோ­கத்­தரும், சாய்ந்­த­ம­ருது – மாளி­கைக்­காடு பெரிய பள்­ளி­வாசல் நிரு­வா­கத்தின் உறுப்­பி­னர்­களும், அப்­பி­ர­தே­ச­வா­சி­களும் இணைந்து விசா­ரணை நடாத்தி பொலி­சா­ருக்கும் உட­னடி தகவல் வழங்­கினர்.

அதன் பின்னர் ஸ்தலத்­திற்கு விரைந்த போக்­கு­வ­ரத்து கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­சாரும், குறித்த குழு­வி­னரும் பொது­மக்­களைப் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளிலும், பயங்­க­ர­வா­திகள் தப்­பிக்க முடி­யா­த­வாறு பாதை­களை மறித்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். அதன் பின்னர் ஸ்தலத்­திற்கு விரைந்த படை­யினர், தீவி­ர­வா­தி­க­ளுடன் போராடி நிலை­மையை தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்­ளனர்.

குறித்த பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு இப்­பி­ர­தே­சத்தில் என்­று­மில்­லா­த­வாறு அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தி எம்மை மிகுந்த கவ­லைக்குள் ஆழ்த்­தி­யி­ருக்கும் இப்­ப­யங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு மர­ணித்த எவ­ரது உடல்­க­ளையும் எமது பள்­ளி­வாசல் பொறுப்­பேற்­காது என்­ப­துடன், அவர்­களை இப்­பி­ர­தேச மைய­வா­டி­களில் அடக்கம் செய்­யவும் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

ஸியாரம் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்கு வைத்து விச­மி­களின் தாக்­குதல் நடை­பெ­றலாம் என பொலிசார் எம்மை எச்­ச­ரித்­த­தற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்­துள்ள எமது பள்­ளி­வா­சல்­களை பாது­காக்கும் பல நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­யி­ருந்தோம். இக்­கொ­டிய காட்டு மிராண்­டிகள் எமது பள்­ளி­களை இலக்கு வைத்­தி­ருப்­பார்­க­ளாயின் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை இழக்க நேரி­டலாம்.

அல்லாஹ் இப்­பி­ர­தே­சத்­திற்கு ஏற்­ப­ட­வி­ருந்த பெரும் அபா­யத்­தி­லி­ருந்து எம்மைப் பாது­காத்­துள்ளான்.

தங்­க­ளது உயிரைப் பணயம் வைத்து, சந்­தே­கத்­திற்­கி­ட­மான நபர்­களை சென்று விசா­ரித்து, பொலி­சா­ருக்கு தகவல் வழங்கி ஒரு பேர­ழி­வி­லி­ருந்து இப்­பி­ர­தே­சத்தை பாது­காக்க நட­வ­டிக்கை மேற்­கொண்ட எம­தூரின் துணிச்­ச­லான அந்த சகோ­த­ரர்­க­ளுக்கும், எமது மக்­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாமல் உடன் நட­வ­டிக்கை மேற்­கொண்ட இந்­நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்பு முப்­ப­டை­யி­ன­ருக்கும் மனம் நெகிழ்ந்து நன்றி கூறு­கின்றோம்.
ஏற்­க­னவே சுனா­மியால் பாதிக்­கப்­பட்டு தமது உற­வு­க­ளையும், சொத்­துக்­க­ளையும் இழந்து மீள் குடி­யே­றி­யுள்ள இம்­மக்­களை மீண்டும் துய­ரத்தில் ஆழ்த்­தி­யி­ருக்கும் இக்­க­ய­வர்கள் மீது அல்­லாஹ்வின் சாபம் உண்­டா­கட்டும்.
இச்­சந்­தர்ப்­பத்தில் மக்­களை அமைதி காக்­கு­மாறும், தொழு­கை­க­ளிலும், பிரார்த்­த­னை­க­ளிலும் ஈடு­ப­டு­மாறும், பாது­காப்பு தரப்பின் அறி­வு­றுத்­தல்­களை முழுமையாக பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இப்பிரதேச மக்களை அன்பாக வேண்டுகின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம். சலீம் ஷர்க்கி, வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.