இதுவரை நாடு முழுவதும் 155 சந்தேக நபர்கள் கைது

0 550

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்­கையில் பதி­வான 8 தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை தொடர்ந்து 155 பேர் நேற்று நண்­பகல் வரை சி.ஐ.டி. உள்­ளிட்ட பல பொலிஸ் பிரி­வி­னர்­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

நேற்று பிற்­பகல் 2.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பல்­வேறு பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட முற்­று­கையின் போது இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை ஷெங்­ரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஆகிய நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தாக்­குதல் நடத்­திய தற்­கொலை தாரி­க­ளான இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய பயங்­க­ர­வா­தி­களின் மூத்த சகோ­த­ரர்­க­ளான மொஹம்மட் இப்­ராஹீம் இம்தான் அஹமட் என்­ப­வரை இரு வாள்­க­ளுடன் பொலிசார் கைது செய்­துள்­ளனர். அத்­துடன் தற்­கொ­லை­தா­ரர்­க­ளான குறித்த சகோ­த­ரர்­களின் வீட்டில் இருந்து மூன்று கோடி ரூபா பெறு­ம­தி­யான நீல மாணிக்கக் கற்கள், ஒரு கோடிக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய உள்­நாட்டு வெளி­நாட்டு பண நோட்­டுக்கள், 15 இலட்சம் வரை பெறுமதி கொண்ட தங்க நகைகள் என்பன சி.ஐ.டி. சோதனையில் சிக்கியுள்ளன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.