இலங்­கையில் மத்­ர­ஸாக்­க­ளி­லேயே பயங்­க­ர­வாதம் உருப்­பெ­று­கின்­றது

கடும் குற்றச்சாட்டுகளை முன்னவைக்கிறார் விமல்

0 640

ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்

இலங்­கையில் மத்­ர­ஸாக்­க­ளி­லேயே இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் உருப்­பெ­று­கின்­றது. நாட்டில் அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை முதலில் தடை செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­பட வேண்­டு­மென எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்ச சபையில் சுட்­டிக்­காட்­டினார். இலங்­கையில் இடம்­பெற்ற தாக்­கு­தலை இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத செயற்­பாடு என அர­சாங்­கத்தால் கூற முடி­ய­வில்லை. சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் என்றே கூறு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற அவ­ச­ர­கால சட்ட ஒழுங்கு விதி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான சட்­ட­மூலம் மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் அதன்­போது தெரி­விக்­கையில்,

வணாத்­து­வில்­லு­வில் வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்ட பின்­னரும் மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்ட போதும் இது தொடர்­பாக ஆரா­யு­மாறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்த விட­யத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து ஏற்­படும் பாதிப்­பு­களை தடுக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்­போது மீண்டும் 10 வரு­டங்­களின் பின்னர் பிள்­ளை­களை வெளியில் அனுப்ப முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. இவ்­வா­றாக அச்ச நிலை­மையை மீண்டும் கொண்டு வந்­தது யார்? 2015 ஜன­வரி 8ஆம் திகதி அச்ச நிலைமை இல்­லாது செய்­யப்­பட்ட நாட்­டையே தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் பொறுப்­பேற்­றனர். ஆனால் மீண்டும் அந்த நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளனர். வீதியில் நடந்து செல்ல முடி­யாத நிலை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­ப­வத்தை இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத செயற்­பாடு என இவர்­களால் கூற முடி­ய­வில்லை. சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் என்றே கூறு­கின்­றனர். அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக சட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்கு இவர்கள் இட­ம­ளிக்­க­வில்லை. தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை தடை செய்ய ஏன் இன்னும் நட­வ­டிக்­கை­யெ­டுக்­க­வில்லை. நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்றால் தேசிய பாது­காப்பு உறு­தி­யாக இருக்க வேண்டும். பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட பின்னர் புல­னாய்வு பிரி­வினர் மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். கிரித்­தலே இரா­ணுவ முகாமை அடிப்­ப­டை­யாக கொண்டே கிழக்கில் புல­னாய்வு பிரி­வினர் செயற்­பட்­டனர். ஆனால் மங்­கள சம­ர­வீர ஜெனி­வாவில் வழங்­கிய வாக்­கு­று­திக்­க­மை­யவே கிரித்­தலே புல­னாய்வு பிரிவு அகற்­றப்­பட்­டது. இஸ்­லா­மிய அடிப்­படை வாதத்­திற்கு இட­ம­ளிக்கும் வகை­யி­லேயே அதனை நீக்­கி­யுள்­ளனர்.

கத்­தோ­லிக்க மக்­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்த வேண்டும். சர்­வ­தேச நாடுகள் இந்த விட­யத்தில் கவனம் செலுத்­து­மென்ற நோக்­கத்­தி­லேயே இதனை செய்­கின்­றனர். இந்த அர­சாங்­கமே இவற்­றுக்கு முழுப் பொறுப்­பையும் ஏற்க வேண்டும். தற்­போது ஐக்­கிய அமெ­ரிக்கா உத­வு­வ­தாக கூறு­கின்­றனர். இப்­போது எப்.பீ.ஐ. வரு­கின்­றது. இன்­னு­மொரு சம்­பவம் நடந்தால் அமெ­ரிக்க இரா­ணு­வமும் வரும். இந்­த­ள­வுக்கு வெடி­பொ­ருட்கள் இங்கு எப்­படி வந்­தது. நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலை­மைக்கு கொண்டு வர­வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே செயற்­ப­டு­கின்­றனர். அப்­போதே சர்­வ­தேச நாடு­க­ளுக்கு இங்கு தலை­யிட முடியும். இங்கு மத்­ர­சாக்­களில் தற்­கொலை தாக்­குதல் மன­நி­லைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. பாகிஸ்­தானில் இதற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று இங்கும் செய்ய வேண்டும். இதேவேளை அடிப்படைவாத அமைப்புகளை இங்கு தடை செய்ய வேண்டும் எல்லோருக்கும் முறையாக சட்டத்தை செயற்படுத்த வேண்டும். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறான நோக்கங்கள் கிடையாது. அரசியலுக்காக அவர்களை பயன்படுத்த வேண்டாம். அத்துடன் தீர்மானங்களை எடுக்கும் போது வாக்குகளுக்காக தீர்மானம் எடுக்காது நாட்டுக்காக தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.