பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்குக

சபையில் அமைச்சர் ரிஷாட்

0 927

கிறிஸ்­த­வர்­களின் ஈஸ்டர் திரு­நா­ளன்று தேவா­ல­யங்­க­ளிலும், பிர­பல ஹோட்­டல்­க­ளிலும் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடாத்தி அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பறித்தும், காயப்­ப­டுத்­தியும் இந்த நாட்டில் மிக மோச­மான ஈனச்­செ­யலைச் செய்த பயங்­க­ர­வாத இயக்­கத்தை உட­ன­டி­யாக தடை செய்ய வேண்­டு­மெ­னவும் இந்த கயவர் கூட்­டத்தை பூண்­டோடு அழித்­தொ­ழிக்க வேண்­டு­மெ­னவும் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் பாரா­ளு­மன்றில் கோரிக்கை விடுத்தார்.

நேற்று மாலை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ரிஷாட் பதி­யுதீன் மேலும் கூறி­ய­தா­வது, புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்­கிய இந்த சம்­ப­வத்தை நாங்கள் சிறி­ய­தாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அர­சியல் செய்­வார்­க­ளாயின் அதை விட கேவ­ல­மான ஒன்­றாக இருக்க முடி­யாது.

புலிகள் இயக்­கத்தில் தற்­கொலைத் தாக்­கு­தலை நடாத்­திய கரும்­பு­லி­க­ளுக்கு இதனை செயற்­ப­டுத்த சுமார் 20 வரு­டங்கள் எடுத்­தன. ஆனால் இந்த மோச­மான கய­வர்கள் ஒரு குறிப்­பிட்ட காலத்தில் இவ்­வா­றான ஒரு ஈனச்­செ­யலை மேற்­கொண்டு ஒரே நாளில் இத்­தனை அழி­வு­களை உண்டு பண்­ணி­யி­ருக்­கின்­றனர். இதன் மூலம் உயிர்­களைப் பலி கொண்­டது மாத்­தி­ர­மன்றி எதிர்­கால சந்­த­தி­யி­னரின் வாழ்வை சீர­ழித்­துள்­ளனர்.

இவ்­வா­றான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்­லிம்­களும் அவர்­களின் வழி­காட்டல் இயக்­க­மான ஜம்­இய்­யதுல் உல­மாவும் பெரும் கவலை கொண்­டி­ருப்­ப­துடன் தினமும் வேத­னையால் வாடிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

அது மாத்­தி­ர­மன்றி இந்த சமூகம் பகி­ரங்­க­மாக இந்த செயலை கண்­டித்­தி­ருக்­கின்­றது. அது மாத்­தி­ர­மன்றி இந்த சம்­ப­வத்தின் சூத்­தி­ர­தா­ரி­யான சஹ்ரான் என்­ப­வ­ரி­னதும் புகைப்­ப­டத்­தையும் ஆவ­ணங்­க­ளையும் பாது­காப்பு தரப்­பி­ன­ரிடம் சமர்ப்­பித்தும் பாது­காப்பு தரப்­பினர் நட­வ­டிக்கை எடுக்­கா­தது குறித்து இன்றும் ஜம்­இய்­யதுல் உல­மாவும், முஸ்லிம் சமூ­கமும் வேத­னை­யுடன் இருக்­கின்­றனர். உரிய நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து எங்­க­ளி­டமும் கேள்வி கேட்­கின்­றனர்.

இந்த நாட்­டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்­பாக இருக்­கின்­றது. அது மாத்­தி­ர­மின்றி இந்த பயங்­க­ர­வா­தத்தை துடைத்­தெ­றிய முழு­மை­யான ஒத்­து­ழைப்­பையும் வழங்க வேண்டும்.
பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட வேண்டும், அழிக்­கப்­பட வேண்­டு­மென சிந்­திக்­கின்ற செயற்­ப­டு­கின்ற, தயா­ராக இருக்­கின்ற எங்­க­ளைப்­போன்ற அர­சி­யல்­வா­தி­களை இந்த பயங்­க­ர­வா­தி­க­ளுடன் சம்­பந்­தப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு உற்­சா­கப்­ப­டுத்த வேண்­டா­மெ­னவும், உதவி செய்ய வேண்­டா­மெ­னவும் நான் விந­ய­மா­கவும் கேட்­கின்றேன். ஏனைய பயங்­க­ர­வா­திகள் போன்று இவர்­களை சாதா­ர­ண­மா­ன­வர்­க­ளாக நினத்து எங்­க­ளுடன் முடிச்சுப் போட வேண்­டா­மெ­னவும், நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்க வேண்­டா­மெ­னவும் பணி­வாகக் கேட்­கின்றேன்.

வணாத்­த­வில்­லுவில் ஆயு­தங்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக செய்­திகள் வந்­தன, அத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்ட போதும் அவர்­களை விடு­விக்க செய்ய அர­சி­யல்­வா­திகள் பேசி­ய­தாகச் சொல்­லப்­பட்­டது. பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­த­ன­விடம் நான் பகி­ரங்­க­மாகக் கோரிக்கை விடுக்­கின்றேன். இது தொடர்பில் இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்­த­வில்­லுவில் கைது செய்­யப்­பட்­ட­வரை விடு­வி­யுங்கள் என்று பொலி­சா­ருக்கோ, அர­சியல் தலை­மை­க­ளுக்கோ எந்த அர­சி­யல்­வாதி பேசி­யது என்று இந்த சபையில் தெரி­யப்­ப­டுத்த வேண்டும். அல்­லது அதன் உண்­மைத்­தன்­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும். யாரா­வது பேசி­யி­ருந்தால் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து இல்­லாத பொல்­லாத விட­யங்­களைக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.

அது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா பல ஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன எனவும் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.