குண்டு தாக்­கு­த­லுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்தை தொடர்­பு­ப­டுத்தி பரப்­பப்­படும் செய்­திக்கு கண்­டனம்

0 793

இலங்­கையின் சில பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட எட்டு குண்டு வெடிப்பு சம்­ப­வங்களில் இது­வரை 320க்கும் மேற்­பட்­ட­வர்கள் கொலை செய்­யப்­பட்டு 500 மேற்­பட்­ட­வர்கள் காயம் அடைந்­துள்­ளனர். இன மத வேறுபா­டு­க­ளுக்கு அப்பால் இலங்கை வாழ் அனைத்து சமூ­கத்தை சார்ந்­த­வர்­களும் இதில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். உண்­மையில் இந்த படு மோச­மான செயலை நினைக்கும் போது இரத்தக் கண்ணீர் வடிக்கும் அள­வுக்கு வேதனை அளிக்­கி­றது. மனித நேயத்தை கடு­க­ளவும் விரும்பும் எவரும் இந்தச் செயலை ஆத­ரிக்­க­மாட்­டார்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை கண்­டித்­தி­ருந்­த­துடன், மீண்டும் ஒரு முறை இந்­நி­கழ்­வினை வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.
இது விட­ய­மாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் செய­லாளர் எம்.எப்.எம். பஸீஹ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
இதில் பாதிக்­கப்­பட்ட அனைத்து சாரா­ருக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­விப்­ப­துடன். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மன வலி­மையை வழங்க வேண்டும் என்று இறை­வனை வேண்டிக் கொள்­கிறோம்.

குறித்த குண்டு வெடிப்பு செயல் நடை­பெற்­றது முதல் நேஷனல் தவ்ஹீத் ஜமா­அத் (NTJ) தொடர்­பு­ப­டுத்தி ஊட­கங்கள் தகவல் தெரி­விக்­கி­றது.
உண்மைத் தன்மை தெரி­யா­விட்­டாலும் இத்­த­கைய மோச­மான மனி­தத்­தன்­மைக்கு மாற்­ற­மான செயலை யார் செய்­தி­ருந்­தாலும் எந்த அமைப்பு செய்­தாலும் எந்த மதத்தை சார்ந்­த­வர்கள் செய்­தாலும் பார­பட்­ச­மின்றி அவர்­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் எமக்கு கடு­க­ளவும் மாற்றுக் கருத்­தில்லை.

இவ்­வா­றான நிலையில் சில மீடி­யாக்­களும், செய்­தித்­த­ளங்­களும் பொறுப்­பற்ற விதத்தில் நடந்து கொள்­கி­ன் றன. இலங்­கையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்­லது தவ்ஹீத் என்ற பெயரை இணைத்து பல அமைப்­புக்கள் செயல்­ப­டு­கி­ன்றன.
ஒவ்­வொரு ஊர் பெயரை தவ்­ஹீதுடன் பயன்­ப­டுத்தி அமைப்­புகள் செயல்­ப­டு­கி­ன்றன.

இது போன்ற அமைப்­புக்­க­ளுக்கும் தீவி­ர­வா­தத்­திற்கு எந்த தொடர்பும் இல்லை என்­ப­துடன் இது போன்ற தவ்ஹீத் பெயரைப் பயன்­ப­டுத்தி NTJ (National thawheed Jamath) என்ற ஒரு அமைப்பும் செயல்­பட்டு வரு­கி­றது. இந்த அமைப்பின் பெயர் குறித்த நிகழ்­வுடன் சம்­பந்­தப்­ப­டுத்தி பேச­ப்ப­டு­கின்ற கார­ணத்தால் சிலர் புரி­யாமல் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) துடன் தொடர்புபடுத்தி அவ­தூறு பரப்­பு­கி­றார்கள். அதை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம்.
பல அமைப்­புக்­களும் தவ்ஹீத் என்ற பெயரைப் பயன்­ப­டுத்­தி­னாலும் தேசிய தவ்ஹீத் ஜமா­அத்­திற்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்­திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கொள்கை ரீதி­யாகவும் வேறு­பட்ட கொள்­கையைக் கொண்­டுள்ளோம். அதே நேரம் நெஷனல் தவ்ஹீத் ஜமா­அத்தை சார்ந்­த­வர்கள் எச்­சந்­தர்ப்­பத்­திலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்­துடன் தொடர்பில் இருந்­ததும் இல்லை. அங்கம் வகித்­த­து­மில்லை என்­பதை பொறுப்­புடன் கூறிக்­கொள்­கிறோம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) ஆகிய நாம் நாட்டின் இறை­யாண்­மைக்கும் அர­சியல் சாச­னத்­திற்கும் கட்­டுப்­பட்டு நாட்டு சட்­டத்­திற்கு உட்­பட்டு குர்ஆன்,சுன்­னாவை கடை­பி­டிப்­ப­துடன், பல்­வேறு சமூக சேவை­க­ளையும் மனி­தா­பி­மான செயல்­க­ளையும் செய்து வரு­வது பல­ருக்கும் தெரியும் குறிப்­பாக உளவுத் துறைக்கும் மிகவும் தெரிந்த விட­ய­மாகும்.

எனவே இது போன்ற மனி­தா­பி­மானம் இல்­லாத செய­லுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்தை தொடர்பு படுத்தி செய்தி பரப்­பு­வதை நாம் வன்­மை­யாக கண்­டிப்­ப­துடன் இது தொடர்பில் மீடி­யாக்­களும் பொது­மக்­களும் சமூகப் பொறுப்­புடன் நடந்து கொள்­ளு­மாறு வின­யமாய் வேண்டிக் கொள்­கிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.