தெமட்டகொடையில் தப்பிச்சென்றவர் கண்டியில் கைது

0 588

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களை திட்­ட­மிடும் மத்­திய நிலை­ய­மாக விளங்­கி­ய­தாகக் கூறப்­படும் தெமட்­ட­கொடை மஹ­வில கார்டன் வீட்­டினை பொலிஸார் சோத­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது அங்­கி­ருந்து தப்­பிச்­சென்ற, தற்­போது சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள கோடீஸ்­வர வர்த்­த­கரின் மரு­மகன் கண்டி பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறிப்­பிட்ட கோடீஸ்­வர வர்த்­த­கரின் மரு­மகன் வாட­கைக்­கா­ரொன்றில் கொழும்­பி­லி­ருந்து கண்­டிக்குத் தப்­பி­வந்­த­போது அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் வாட­கைக்­காரும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.
தெமட்­ட­கொடை வீட்டிலிருந்து மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.