தற்கொலை தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு

0 533

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

முஸ்லிம் மக்­க­ளுக்கும் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு நாம் இந்த சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

அத்­துடன், அவ­ச­ர­கால சட்­டத்­தி­னூ­டாக இங்கு பர­வி­யுள்ள பயங்­க­ர­வாத குழுக்­களை கைது­செய்யும் அதி­காரம் இரா­ணு­வத்­திற்கும், தடுத்து வைத்து விசா­ரிக்கும் அதி­காரம் பொலிஸ் மற்றும் பாது­காப்பு படைக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த தேடு­தலில் மிக­முக்­கி­ய­மான ஒரு­சிலர் கைது­செய்­யப்­பட்டு அவர்­க­ளி­னூ­டாக முக்­கி­ய­மான தக­வல்கள் பெற்­று­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த பயங்­க­ர­வாத குழுவில் ஆயு­தங்­களை கொண்­டு­வரும் நபர்கள், தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உள்­ளனர். பல இடங்­களில் தாக்­குதல் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதில் ஒரு பகு­தியை மட்­டுமே நாம் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார் .

பாரா­ளு­ம­ன்றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிர­தமர் ஆற்­றிய விசேட உரையின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டின் நிலை­மைகள் குறித்து ஆராய அவ­சர பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­மாறு நான் விடுத்த கோரிக்­கைக்கு அமைய இன்று பாரா­ளு­மன்றம் கூடி­யுள்­ளது, இதன்­போது எதிர்க்­கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தலைவர், ஜே.வி.பி தலைவர் ஆகி­யோ­ருடன் பேசி இந்த தீர்­மானம் எடுத்தேன். கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கொல்­லப்­பட்ட பொது­மக்கள் குறித்து எமது அனு­தா­பங்­களை நாம் வெளிப்­ப­டுத்­து­கின்றோம். இன்று நாம் உல­க­ளா­விய பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இங்கு இடம்­பெற்ற பயங்­க­ர­வாத நகர்வின் பின்னும் உல­க­ளா­விய பயங்­க­ர­வாத இணைப்­புகள் உள்­ள­மையே உண்­மை­யாகும். இதற்கு முன்­னரும் நாம் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்தோம். இதன்­போதும் நாம் கீழ்­மட்டம் வரையில் அவ­தானம் செலுத்­திய கார­ணத்­தினால் தான் யுத்­தத்தை வெற்­றி­கொண்டோம். 2009 ஆம் ஆண்­டுடன் அனைத்­துமே முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் இன்று இருப்­பது விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் பயங்­க­ர­வாதம் அல்ல. இது உல­க­ளா­விய பயங்­க­ர­வாதம். சர்­வ­தேச நாடுகள் இதில் பாரிய அளவில் முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். லண்டன் நகர் இதற்கு பாரிய அளவில் முகங்­கொ­டுத்து வரு­கின்­றது.

உல­க­ளா­விய பயங்­க­ர­வாத சுட்டெண் பிர­காரம் மத­ரீ­தி­யி­லான பயங்­க­ர­வாதம் பல­ம­டைந்­துள்­ளது. சர்­வ­தேசம் இதனை சுட்­டிக்­காட்டி வரு­கின்­றது. மத­வாத ஜிஹாதி யுத்தம் என்று கூறி­னாலும் கூட இது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களின் கீழ்தான் வரு­கின்­றது. இன்­றுள்ள பயங்­க­ர­வாதம் திட்­ட­மி­டப்­பட்ட நீண்­ட­கால இலக்கை கொண்ட பயங்­க­ர­வாதம். இதில் ஒரு சிலர் இங்கு இருந்­தாலும் கூட இதன் பின்­னணி பாரிய திட்­ட­மி­டப்­பட்ட ஒன்­றாகும். இவர்­க­ளுக்கு பயிற்ச்­சிகள் வழங்­கப்­பட்­டுள்­ளது. பல இடங்­களில் தாக்­குதல் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதில் ஒரு பகு­தியை மட்­டுமே நாம் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

தேபோல் இந்த குழுவின் இர­க­சிய தன்மை வெளி­வந்­துள்­ளது. இதனை திட்­ட­மிடும் நபர்கள் ஆயு­தங்­களை கொண்­டு­வரும் நபர்கள், தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உள்­ளனர். அவர்­களை கைது­செய்யும் நட­வ­டிக்­கைகள் புல­னாய்வு உத­வி­யுடன் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இப்­போது அவ­ச­ர­கால சட்டம் மூல­மாக இவர்­களை கைது­செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இவர்­களை கைது­செய்யும் அதி­காரம் இரா­ணு­வத்­துக்கும், தடுத்து வைத்து விசா­ரிக்கும் அதி­காரம் பொலிஸ் மற்றும் பாது­காப்பு படைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­சிலர் இப்­போது கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். முக்­கி­ய­மான தக­வல்கள் பெற்­று­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் மக்­க­ளுக்கும் இந்த செயற்­பா­டு­க­ளுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு நாம் இந்த சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்டும். எமது பொரு­ளா­தா­ரத்தை வீழ்த்தும் நோக்­கமும் இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­தது. எமது சுற்­று­லாத்­து­றையை இவர்கள் இலக்கு வைத்­துள்­ளனர். இப்­போது நாம் நன்­றாக வளர்­ச்சி­கண்டு வரு­கின்ற நிலையில் இந்த தாக்­குதல் ஏற்­பட்­டது. எவ்­வாறு இருப்­பினும் மீண்டும் 30 ஆண்­டு­கால யுத்தம் ஒன்­றினை நடத்த நாம் தயா­ரில்லை அதற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­து­மில்லை. இந்த பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு சகல சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும் என ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அதேபோல் பிர­தான நாடு­களின் தலை­வர்கள் அனை­வ­ருமே எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி இலங்­கையை மீட்­க கைகொ­டுப்­ப­தாக தெரி­வித்­துள்­ளனர். எமது பக்கம் குறை­பா­டுகள் உள்­ளது, எனினும் இந்த பயங்­க­ர­வா­தத்தை அழிக்க சர்­வ­தேச ஒத்­து­ழைப்­பு­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும். இந்த சவா­லுக்கு நாம் முகங்­கொ­டுக்க முடியும், இதைவிட மோசமான சூழலில் நாம் செயற்பட்டுள்ளோம். இந்த விடயத்தில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மக்கள் இப்போதே நாம் அனைவரும் அரசியல் இலாபம் பெறுகின்றோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். 1983 ஆம் ஆண்டு ஒரு சிறிய அளவினால் பயங்கரவாத அமைப்பு உருவாகியது. அதனை இனரீதியில் கருதியதன் காரணத்தினால் தான் பாரிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இந்த செயற்பாடுகளையும் அவ்வாறு கருதக் கூடாது. ஆகவே அதனை தவிர்த்துக்கொள்ளும் விதமாக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.