சகல பள்ளிவாசல்களிலும் வெள்ளைக்கொடி ஏற்றவும்

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

0 511

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்­களில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் அனு­தா­பங்­களைத் தெரி­விக்கும் வகையில் நாட்­டி­லுள்ள அனைத்­துப்­பள்­ளி­வா­சல்­க­ளிலும் வெள்­ளைக்­கொ­டி­யினைப் பறக்க விடு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக் ‘விடி­வெள்ளி’ க்கு கருத்துத் தெரி­விக்­கையில்,
நாட்டில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்தில் 300 க்கும் மேற்­பட்ட அப்­பாவி மக்கள் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள்.

இவர்­களில் அநேகர் வணக்க வழி­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள். இவ்­வா­றான செயல்­களை இஸ்லாம் எதிர்க்­கி­றது.இச்­சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், பலி­யா­ன­வர்­க­ளுக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம் என்றார்.

பள்­ளி­வா­சல்­களில் வெள்­ளைக்­கொ­டி­யுடன் அனுதாப பதாதைகளையும் காட்சிப்படுத்தும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.