ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா ஆடையைத் தடை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசுமாரசிங்க தனிநபர் பிரேரணையொன்றினை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு இது தொடர்பாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லிம்களின் சம்பிரதாய ஆடை அல்லாத முகத்தை முழுமையாக மறைத்து அணியும் பெண்கள் ஆடையை சர்வதேசத்திலும் ஆண்கள் கூட அணிந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த ஆடை தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த புர்கா தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வினவியபோது இந்த ஆடை முஸ்லிம்களின் சம்பிரதாய ஆடை அல்ல என ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
தற்போது நாட்டில் சில பிரதேசங்களில் புர்காவை கழற்றிவிட்டு உள்நுழையுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி முகத்தை மறைத்து அணியும் புர்கா தடை செய்யப்படுவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli