ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரியது

0 553

இலங்­கையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­களை இலக்கு வைத்து நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெ ளியிட்­டுள்­ளன.

சுமார் 321 பேரை பலி­கொண்ட இந்த கொடூ­ர­மான தாக்­கு­தலை தமது இயக்­கமே மேற்­கொண்­ட­தாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிர­சார பிரி­வான ஆமாக் செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

” இலங்­கையில் நேற்று முன்­தினம் நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லா­னது கூட்­டணி நாடு­களின் பிர­ஜை­க­ளையும் இலங்­கை­யி­லுள்ள கிறிஸ்­த­வர்­க­ளையும் இலக்கு வைத்­த­தாகும். இத் தாக்­கு­தலை நடாத்­தி­ய­வர்கள் ஐ.எஸ். அமைப்பின் போரா­ளி­க­ளாவர்” என அந்தச் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நியூ­ஸி­லாந்தில் கடந்த மாதம் இடம்­பெற்ற கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு பழி­தீர்க்கும் வகை­யி­லேயே இலங்­கையில் இத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.