(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையுடன் திருகோணமலை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை, திருகோணமலை வர்த்தக சம்மேளனம், திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியன சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தன.
இதன் போது நேற்று முன்தினம் இடம் பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கு தங்களது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் , இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூர தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கெதிராக பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்க இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
அத்தோடு திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
vidivelli