மட்டக்களப்பில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

0 623

(பழு­லுல்லாஹ் பர்ஹான்)

மட்­டக்­க­ளப்பு கல்­லடிப் பாலத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்­தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்­க­ளத்­திற்கு முன்­பாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த காத்­தான்­குடி நபர்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு மீன்­பிடி பட­குகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுமார் 3.00 மணி­ய­ளவில் இனம் தெரி­யாத நபர்­க­ளினால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேற்­படி பட­கு­களில் ஒரு படகின் முன்­ப­குதி அதிகம் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் மற்­றைய படகு சிறி­தாக சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் இதனை சரி செய்­வ­தற்கு சுமார் 20 இலட்சம் ரூபா தேவைப்­படும் எனவும் குறித்த செயலில் ஈடு­பட்­ட­வர்­களை பொலிசார் உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி நட்­ட­ஈ­டு­களை பெற்­றுத்­தர வேண்டும் எனவும் இது போன்ற சம்­ப­வங்கள் இனிமேல் நடக்­காமல் இருப்­ப­தற்கு பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை சம்பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மேற்­கொள்ள வேண்டும் என்றும் படகு உரி­மை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.
குறித்த படகு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிஸ் நிலை­யத்தில் தாம் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் படகு உரி­மை­யா­ளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.