பாதுகாப்பு பிரிவினர் ஏன் அசிரத்தையாக இருந்தார்கள்?

0 833

உயிர்த்த ஞாயிறு தின­மான நேற்று முன்­தினம் நாட்டில் மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் மூன்று நட்­சத்­திர ஹோட்­டல்கள் உட்­பட 8 இடங்­களில் நடை­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து தொடர்ந்தும் முழு­நாடும் சோகத்தில் மூழ்­கி­யுள்­ளது.

குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­களில் உயி­ரி­ழந்தோர் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­கி­றது. நேற்று திங்­கட்­கி­ழமை வரை 290 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 450 க்கும் மேற்­பட்டோர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றார்கள்.

இதே­வேளை நேற்று முன்­தினம் இரவு கட்­டு­நா­யக்கா விமா­ன­நி­லைய வீதியில் பிளாஸ்டிக் குழாயில் பொருத்­தப்­பட்டு தயா­ரிக்­கப்­பட்ட 6 அடி நீள­மான வெடி­குண்­டொன்றும் விமா­னப்­படை வீரர்­க­ளினால் மீட்­கப்­பட்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாட்டில் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்த அமைப்­பொன்று திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக அரச புல­னாய்வுப் பிரிவு விசேட பாது­காப்பு பிரி­வுக்கு அறிக்­கை­யொன்­றினை சமர்ப்­பித்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பாது­காப்பு குறித்து எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­படி விசேட பாது­காப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யலால் தச­நா­யக்க பாது­காப்பு பிரி­வி­ன­ரையும், பொலிஸ்மா அதி­ப­ரையும் வேண்­டி­யி­ருந்தார். அவர் இது தொடர்­பாக அமைச்­சர்கள் பாது­காப்பு பிரிவு, நீதிச் சேவை பாது­காப்பு பிரிவு, ஓய்வு பெற்ற ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவு, தூது­வர்கள் பாது­காப்பு பிரிவு என்­ப­ன­வற்­றுக்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார். பிர­பல கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் இந்த எச்­ச­ரிக்­கையை இலங்­கையின் பாது­காப்பு பிரி­வினர் பார­தூ­ர­மா­ன­தொன்­றாக கரு­தா­மையே தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது எனலாம். பாது­காப்பு பிரி­வினர் அரச புல­னாய்வு பிரி­வி­னரின் அறிக்­கைக்கு அமை­வாக அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தால் இத்­தாக்­கு­தல்­களைத் திட்­ட­மிட்­டி­ருந்த நபர்­களை அல்­லது குழு­வி­னரைக் கைது செய்­தி­ருக்­கலாம். நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி மக்­களின் உயிர்­களை காப்­பாற்­றி­யி­ருக்­கலாம்.
‘இந்தத் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் ஏற்­க­னவே தக­வல்கள் கிடைத்தும் பாது­காப்பு பிரி­வினர் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­மையும், கவ­னத்­திற்­கொள்­ளா­மையும் பார­தூ­ர­மான விட­ய­மாகும்’ என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டும் இது தொடர்பில் தான் உட்­பட அமைச்­சர்­களின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­ப­டாமை, உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டாமை தொடர்பில் ஆரா­ய­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.
அத்­துடன் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எந்­தத்­த­ரா­த­ரங்­களைச் சேர்ந்­த­வர்கள் என்­றாலும் விசா­ர­ணையின் பின்பு அவர்­க­ளுக்கு கடும் தண்­டனை வழங்­கப்­படும் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்ளார். இது தொடர்­பாக பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு தேவை­யான அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யுள்ள சூழ்ச்­சி­களை வெளிக்­கொ­ணர்­வ­தற்கு பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு ஆலோ­ச­னைகள் வழங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­களை இனங்­கண்டு அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். அதே­வேளை தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­ப­டியும் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்டும் ஏன் அவர்கள் அசி­ரத்­தை­யாக இருந்­தார்கள்? ஏன் அதி­ரடி நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு சூத்­தி­ர­தா­ரிகள் கைது செய்­யப்­ப­ட­வில்லை? என்ற வினாக்கள் மக்கள் மத்தியில் தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.

இதன் பிறகாவது அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்காது ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்காது செயலில் இறங்க வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இச்சம்பவங்களை முன்வைத்து நாட்டில் இனங்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யவேண்டும். நாட்டில் பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.