ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் பேர­திர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளது

0 565

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்டி புனித செபஸ்­தியான் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­லயம் என்­ப­னவும் கொழும்பு நகரில் சங்­கி­ரில்லா, சினமன் கிரான்ட், கிங்ஸ்­பரி, நட்­சத்­திர ஹோட்­டல்­களும் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான செய்­தியை செவி­ம­டுத்த ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் பேர­திர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் இயல்பு வாழ்க்கை அமை­தி­யான முறையில் சுழன்று கொண்­டி­ருந்த வேளையில் பாரி­ய­தொரு சதி முயற்­சியால் நாடு சிக்கி தவிக்க வேண்­டி­யேற்­பட்­ட­தை­யிட்டு ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் ஆழ்ந்த அனு­தா­பத்­தையும் கவ­லை­யையும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது. இவ்­வா­றான சதி நாச­கார வேலை­களில் ஈடு­பட்டு நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்கி சீர­ழிக்க முயற்­சிக்­கின்­ற­வர்­களை இனங்­கண்டு தகுந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அர­சையும் பாது­காப்பு பிரி­வையும் வேண்­டிக்­கொள்­கிறோம்.

சம்­ப­வங்­களின் பொழுது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த அனு­தா­பத்தை தெரிவித்துக்கொள்வதுடன் காட்டுமிராண்டித்தனமான இப்பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.