தேவாலய தாக்குதலில் உயிரிழந்த சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம்

0 548

நீர்­கொ­ழும்பு கட்­டான கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 13 வயது முஸ்லிம் சிறுமி ஒரு­வரின் ஜனாஸா நேற்று நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

குறித்த சிறு­மியின் தந்தை முஸ்­லி­மாவார். தாயாரின் குடும்­பத்­தினர் கத்­தோ­லிக்­கர்­க­ளாவர். இந் நிலையில் அன்­றைய தினம் தேவா­ல­யத்தில் இடம்­பெறும் விசேட நிகழ்­வு­களைப் பார்­வை­யிட குடும்­பத்­த­வர்­க­ளுடன் சென்ற போதே அவர் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்ல ஜும்ஆ பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடாத்­தப்­பட்டு நல்­ல­டக்­கமும் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.