தைக்கா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

0 519

புத்­தளம் மேல­திக நிருபர்

 

உடப்பு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெருக்­கு­வற்றான் புதிய இஸ்­மா­யில்­புரம் வீட்டுத் திட்­டத்தில் உள்ள தைக்கா பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 7.30 மணி­ய­ளவில் இந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

எனினும், குறித்த பள்­ளி­வா­ச­லுக்கோ அல்­லது நபர்­க­ளுக்கோ எவ்­வி­த­மான பாதிப்­பு­களும் ஏற்­ப­ட­வில்லை எனவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் அந்த பகு­தியில் உள்ள வர்த்­தக நிலை­யங்­களில் வீதியை நோக்கி பொருத்­தப்­பட்­டி­ருக்கும் CCTV கம­ராக்­களின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பொலிஸார் ௯றினர்.

இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.