ஈஸ்ட்டர் தாக்குதலில் பலியானோர் தொகை 290 ஆக அதிகரிப்பு

பல்வேறு பகுதிகளில் 50 இற்கும் அதிகமானோர் கைது

0 535

எம்.எப்.எம்.பஸீர், தம்­புள்ளை நிருபர்

தலை நகர் கொழும்பு உட்­பட நாட்டில் நேற்று முன் தினம் இடம்­பெற்ற 8 தொடர் குண்­டு­வெ­டிப்­புக்­களில் கொல்­லப்­பட்­டோரின் எண்­ணிக்கை 290 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதில் மேலும் காய­ம­டைந்த 500 பேர் வரையில் 6 வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ரனர்.
இந் நிலையில் குண்டுத் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்த 290 பேரில் நேற்று வரை 204 பேரின் சட­லங்கள் அடை­யாளம் காணப்­பட்டு சட்ட நட­வ­டிக்­கைகள் பூர்த்தி செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜய­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு தேசிய வைத்­தி­ய­ச­லையில் உள்ள 140 சட­லங்­களில் 89 சட­லங்­களும், நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்ள 104 சட­லங்­களில் 92 சட­லங்­களும், மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்ள 29 சட­லங்­களில் 23 சட­லங்­களும் இவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நேற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக அவர் மேலும் கூறினார்.
இத­னை­விட கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அடை­யாளம் காணப்­ப­டாத 35 சட­லங்­களும் வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் 6 சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படாது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.