முஸ்­லிம்­களின் காணிகள் துரி­த­மாக விடு­விக்­கப்­ப­டுமா?

0 774

இலங்­கையில் இரா­ணு­வத்­தினர் வசம் இருந்த காணி­களில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அண்­மையில் அறி­வித்­துள்­ளது. படை­யி­ன­ரி­ட­மி­ருந்த 84,675 ஏக்கர் காணி­க­ளி­லேயே மேற்­படி தொகை காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களுள் 81 சத­வீ­த­மா­னவை அர­சுக்குச் சொந்­த­மா­னவை என்றும், 90 சத­வீ­த­மான தனி­யா­ருக்­கு­ரி­யவை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­ல­ணியின் 6 ஆவது அமர்வு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நடை­பெற்­ற­போதே இந்தத் தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டன.

2009 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாது­காப்பு தரப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்­தன. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர், படை­யி­ன­ரி­ட­மி­ருந்த காணிகள் துரி­த­மாக விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும், அந்த வகையில், 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில், பாது­காப்பு படைகள் வசம் இருந்து வந்த 84,675 ஏக்­கரில் 71,178 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேற்­படி அமர்­வின்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அத்­தோடு வடக்கு, கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­லணி அமைக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வரை 6,951 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் மேலும் 475 ஏக்கர் விரைவில் விடு­விக்­கப்­பட உள்­ள­தா­கவும் அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அந்த வகையில் தற்­போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணி­களே உள்­ள­தா­கவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

அந்­த­வ­கையில் படை­யினர் வச­மி­ருக்கும் இக் காணி­களை விடு­விக்கும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­க­தாகும். குறிப்­பாக காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி செய­லணி விசேட கவனம் செலுத்­து­கின்­றமை பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

அர­சாங்கம் இவ்­வாறு காணி­களை விடு­விப்­ப­தற்­கான காரணம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வழங்­கிய அழுத்­தங்­க­ளே­யாகும். தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்கும் அர­சாங்­கத்தின் போக்­குகள் ஒரு­பு­ற­மி­ருக்க, காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்­பதில் த.தே. கூட்­ட­மைப்பு குறிப்­பி­டத்­தக்­க­ளவு வெற்றி பெற்­றுள்­ளது என்ற யதார்த்­தத்தை எவரும் மறுக்க முடி­யாது.

எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக இரா­ணு­வத்­தி­னாலும் அர­சாங்­கத்தின் ஏனைய திணைக்­க­ளங்­க­ளி­னாலும் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­பதில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் மக்­களும் தோல்­வியைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள் என்ற யதார்த்­தத்­தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி அனு­மதிப் பத்­திரம் இருக்­கின்ற சுமார் 3000 ஏக்கர் காணிகள் இரா­ணுவம் மற்றும் வன இலாகா திணைக்­களம் ஆகி­ய­வற்றின் பிடியின் கீழ் இருந்து வரு­கின்­றன. பொத்­துவில் மற்றும் திருக்­கோவில், ஆலை­ய­டி­வேம்பு, அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் பாலை­யடி வட்­டையில் 503 ஏக்­கரும், கிரான்­கு­ளத்தில் 885 ஏக்­கரும், அஸ்ரப் நகரில் 150 ஏக்­கரும், பொன்­னான்­வெ­ளியில் 600 ஏக்­கரும், அம்­ப­லத்­தா­றுவில் 144 ஏக்­கரும், கீத்­துப்­பத்­துவில் 96 ஏக்­கரும், பால­மு­னையில் 15 ஏக்­கரும் விடு­விக்­கப்­ப­டாமல் இருந்து வரு­கின்­றன. இவற்றில் சில­வற்றை விடு­விக்க இணக்கம் தெரி­விக்­கப்­பட்ட போதிலும் இது­வரை மக்கள் அங்கு செல்ல அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
இதே­போன்­றுதான் திரு­கோ­ண­ம­லையில் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி உட்­பட ஏரா­ள­மான காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இன்றும் புல்­மோட்டை உட்­பட பல இடங்­களில் காணி­களை அப­க­ரிக்கும் முயற்­சிகள் தொடர்­கின்­றன. வடக்கில் முச­லியில் இரா­ணு­வத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை மீட்­ப­தற்­காக அம் மக்கள் பல வரு­டங்­க­ளாக போராடி வரு­கி­றார்கள்.
இவை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலைமைகள் கையறு நிலையிலேயே உள்ளன. தேர்தல் காலங்களில் மாத்திரம் காணிகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் மறந்துவிடுகின்ற நிலையே நீடிக்கிறது.

அந்தவகையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேற்படி ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை சகல கட்சிகளிதும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னின்று மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.