ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பலஸ்தீன குடும்பத்தின் மீது முகமூடியணிந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் கற்களினால் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்கணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நெப்லஸின் தெற்கே அமைந்துள்ள பலஸ்தீன கிராமமான உரிப்பில், இட்ஸார் குடியேற்றத்தைச் சேர்ந்த முகமூடியணிந்த குடியேற்றவாசிகள் கற்களினால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான யெஸ்டின் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில் பதிவாகியுள்ள கட்சியில் பலஸ்தீன தாயொருவர் குழந்தையொன்றைச் சுமந்தவாறு காரொன்றினுள் ஏறுவதும், அதனைச் சுற்றி குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களும் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. குடியேற்ற வாசிகள் வீதிக்கு ஓடிவந்து கற்களை அவர்கள் மீது வீச ஆரம்பிக்கின்றனர்.
அதன் பின்னர் தாயும் ஏனைய குடும்பத்தின் அங்கத்தவர்களும் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டினுள் ஓடுகின்றனர்.
கிழக்குப் பகுதியில் அண்டையில் அமைந்துள்ள குடியேற்றத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது குடியேற்றவாசிகள் கிராமத்தினுள் திடீரென நுழைந்து வீடுகளுக்கு கற்களை வீசியதோடு கார் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியதாக உரிப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையேயான மோதல்கள் குழுமியிருந்தோரை படையினரும் பொலிஸாரும் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதன்போது குடியேற்றவாசிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு ஆரம்பம் தொடக்கம் பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீதான இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகளும் அத்துமீறல்களும் அதிகரித்துள்ளதாக பெப்ரவரி மாதத்திற்கான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
1967 ஆம் ஆண்டு தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலப் பிரதேசங்களான மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் அல்-குத்ஸ் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 230 இற்கும்.
மேற்பட்ட சட்விரோதக் குடியேற்றங் களில் சுமார் ஆறு இலட்சம் இஸ்ரேலியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
vidivelli