கலாபூஷணம் அரச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

0 608

( மினு­வாங்­கொடை நிருபர் )

‘கலா­பூ­ஷண அரச விருது வழங்கல் விழா – 2019’ இற்­காக, முஸ்லிம் கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்தும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது.

35 ஆவது முறை­யாக இடம்­பெறும் இத்­தே­சிய அரச விழா­வுக்கு, 60 வய­துக்கு மேற்­பட்ட முஸ்லிம் கலை­ஞர்கள், இம்­மாதம் 30 ஆம் திக­திக்கு முன்னர் விண்­ணப்­பிக்க வேண்டும் என,முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்­துள்ளார்.
இதற்­காக, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் www.muslimaffairs.gov.lk என்ற இணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து விண்­ணப்­பங்­களைப் பதி­வி­றக்கம் செய்­து­கொள்ள முடியும்.

குறித்த பிர­தே­சத்தில் தற்­போது நிரந்­த­ர­மாக வசித்து வரும் மற்றும் 2019 டிசம்பர் மாதம் 15 ஆம் திக­தி­யன்று 60 வயதைப் பூர்த்தி செய்­துள்ள முஸ்லிம் கலை­ஞர்கள் இதற்கு விண்­ணப்­பிக்கத் தகு­தி­யு­டை­ய­வர்­க­ளாவர்.
மேற்­படி கலா­பூ­ஷண அரச விருது, குறித்த துறையில் சிரேஷ்­டத்­துவ அடிப்­ப­டையில் தகுதி பெற்­ற­வர்­க­ளுக்கு மாத்­திரம் வழங்­கப்­படும். இதற்­காக ஒரு பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்து மூன்று பேரின் பெயர்கள் சிபா­ரிசு செய்­யப்­படும். அந்­தந்த பிர­தேச கலா­சார அதி­கார சபையின் சிபா­ரி­சுடன், கலா­சார உத்­தி­யோ­கத்தர் அல்­லது கலா­சார அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் அல்­லது அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் ஊடாக பிர­தேச செய­லா­ளரின் அனு­ம­தி­யுடன் அனைத்து விண்­ணப்­பங்­களும் சமர்ப்­பிக்­கப்­படல் வேண்டும்.

நாட்டின் கலைத் துறைக்கு உன்­னத பங்­காற்­றி­ய­வர்­களைக் கௌர­விப்­ப­தற்­காக, இந்த கலா­பூ­ஷண அரச விருது வழங்கல் விழா, ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஜனா­தி­பதி தலை­மையில் கொழும்பில் இடம்­பெற்று வரு­கின்­றது. குறித்த விரு­துக்­காகத் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு, விசேட அரச நினைவுச் சின்னம், பொற்கிழி மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.