அக்ஸா வளா­கத்தில் தீ விபத்து

0 571

பிரான்ஸின் பிர­பல நாட் டாம் தேவா­ல­யத்தில் தீ விபத்து ஏற்­பட்ட அதே நேரத்தில் பலஸ்­தீ­னி­லுள்ள மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்­திலும் தீ விபத்துச் சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது.

2000 வரு­டங்கள் பழை­மை­வாய்ந்த மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்தில் அமைந்­துள்ள அல் மர்­வானி தொழுகை அறை­யி­லேயே இந்த தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளது. எனினும் தீ ஏனைய இடங்­க­ளுக்குப் பர­வாது உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

இத் தீ விபத்து கார­ண­மாக அப் பகுதி ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீ விபத்­துக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. எனினும் அப் பகு­தியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­வர்­களால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.