3000 பேர் இதுவரை புனித ஹஜ் யாத்திரையை உறுதி செய்தனர்

மேலும் 300 பேருக்கு அவகாசம்

0 552

ஏ.ஆர்.ஏ.பரீல்

இவ்­வ­ருடம் 3,000 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது ஹஜ் கட­மையை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் உறுதி செய்­துள்­ளனர். மேலும் 300 பேர் தங்­க­ளது கட­மை­யினை உறு­தி­செய்ய வேண்­டி­யுள்­ளது. ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை உறு­தி­செய்ய வேண்­டிய இறுதித் தினம் 19 ஆம் திக­தி­யாகும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர். எம். மலிக் தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்ப இலக்கம் 13510 வரை ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 19 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மைக்குள் 300 பேர் தங்கள் பய­ணத்தை உறுதி செய்­யாதுவிடின் ஹஜ் பய­ணத்தை இவ்­வ­ருடம் மேற்­கொள்­வ­தற்­காக மேன்­மு­றை­யீடு செய்­துள்ள தெரிவு செய்­யப்­ப­டா­துள்ள பய­ணிகள் பய­ணத்தில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளார்கள்.

அறி­வித்தல் அனுப்­பப்­பட்­டுள்ள ஹஜ் பய­ணிகள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முகவர் நிலை­ய­மொன்றின் ஊடாக திணைக்­க­ளத்தில் தங்­க­ளது கட­வுச்­சீட்­டினைச் சமர்ப்­பித்து QR இலக்­கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
அடுத்தவாரம் ஹஜ் ஏற்பாடுகளின் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.