உற்சவ காலங்களில் முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது

களனி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரர்

0 1,201

உற்­சவ காலங்­களில் முஸ்லிம் கடை­களைப் பகிஷ்­க­ரிக்கக் கோரு­வதில் உள்­நோக்­க­முள்­ளது. இதே­நி­லைமை தேர்தல் காலங்­க­ளிலும் ஏற்­ப­டலாம் என கள­னிபல்­க­லைக்­க­ழக வர­லாற்­றுத்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் தெரி­வித்தார்.

கள­னி­பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய மாணவர் அமைப்பின் USWA சஞ்­சிகை வெளி­யீட்டு நிகழ்வு கடந்த செவ்­வா­யன்று அமைப்பின் தலை­வர் ருக்ஸான் நிஸார் தலை­மையில் பல்­க­லைக்­க­ழக சமூக விஞ்­ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.  இந்­நி­கழ்வில் பிர­தம பேச்­சா­ள­ராக கலந்­து­கொண்டு பேசு­கை­யிலே இத­னைத்­தெ­ரி­வித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறி­ய­தா­வது, பொருட்கள் கூடு­த­லாக விற்­கப்­படும் காலங்­க­ளிலே இவ்­வா­றான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

ஒரு நாட்டில் ஒரு சமூகம் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேல் வாழ்ந்தால் அவர்கள் விருந்­தா­ளி­க­ளாக கரு­த­மு­டி­யாது. அவர்கள் நாட்டு பிர­ஜை­களே அவர்­களை மேலும் வெளி­நாட்­ட­வர்­க­ளாக கருத முடி­யாது. ஒரு நாட்டில்  நல்­லி­ணக்­கத்தை அரசோ வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களோ ஏற்­ப­டுத்த முடி­யாது மக்­க­ளா­கிய  நாமே ஏற்­ப­டுத்த வேண்டும் என்றார்.

இங்கு உரை­யாற்­றிய முஸ்லிம் மீடியா போரத்தின் தலை­வரும் களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் பழைய மாண­வ­ரு­மான என்.எம். அமீன் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் எதிர்­காலத் தலை­வர்­க­ளா­க­வுள்ள பட்­ட­தாரி மாண­வர்­களால் வெளி­யி­டப்­படும் சஞ்­சி­கைகள் முஸ்லிம் சமூ­கத்தின் துன்­பி­யல்­களை ஆய்வு நடாத்தி வெளி­யிடும் கட்­டு­ரை­களைத் தாங்கி வரு­வ­தாக இருக்க வேண்டும்,

பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மஜ்­லிஸ்­க­ளினால் வெளி­யி­டப்­படும் சஞ்­சி­கைகள், ஆய்­வுக்­கட்­டு­ரைகள் உள்­ள­டக்­கி­ய­தாக அமைதல் வேண்டும். அதன்­மூலம் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­படும் விட­யங்­களைச் சமூ­கத்தின் அவ­தா­னத்­துக்கு கொண்டு வர­மு­டியும்.

காலத்­துக்­கு­ரிய பிரச்­சி­னை­களை ஆய்­வு­செய்து அது­பற்றி பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு இச்­சஞ்­சி­கை­களைப் பயன்­ப­டுத்த வேண்டும்.

1974இல் இந்த முஸ்லிம் மஜ்­லிஸை ஆரம்­பித்த போது, முத­லா­வது சஞ்­சி­கையில் இலங்கை முஸ்­லிம்­க­ளது வர­லாற்­றினை ஆவ­ணப்­ப­டுத்தி வெளி­யி­டு­வ­தனை வலி­யு­றுத்தி அட்­டைப்­படம் மற்றும் ஆக்­கங்­களை நாம் வெளி­யிட்டோம். பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மஜ்­லி­ஸுகள் வெளி­யிடும் சஞ்­சி­கைகள், பாட­சா­லை­களில் வெளி­யிடும் சஞ்­சி­கைகள் போலன்றி கருத்­தா­ழம்­மிக்­க­தாக அமைதல் வேண்டும்.

நீங்கள் கள­னியில் இருக்­கின்­றீர்கள். உங்­க­ளுக்கு அண்­மித்த கொழும்பு மாந­கரில் மாளி­கா­வத்தை, வாழைத்­தோட்டம், புதுக்­கடை, மட்­டக்­குளி, கிரான்ட்பாஸ் போன்ற பகு­தி­களில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் அவ­ல­நிலை பற்றி ஆய்­வு­களை நடாத்தி அவற்றை வெளி­யிட முன்­வ­ர­வேண்டும்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில்  படிக்கும் போது மாற்று மத மாண­வர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வது அவ­சியம். 1974இல் நாம் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வந்த போது தமிழ்­மொழி மாண­வர்­க­ளுக்கு அடிப்­படை வச­திகள் இருக்­க­வில்லை. அப்­போது எமக்கு நீதி கோரி பிக்கு மாண­வர்­களும் சிங்­கள மாண­வர்­களும் போராட்டம் நடத்­தி­யது எனது நினைவில் இன்னும் பதிந்­துள்­ளது.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் படிக்கும் நீங்கள், எதிர்காலங்களில் சமுதாயத்துக்கு அரசியல், நிர்வாகம் மற்றும் துறைகளின் தலைவர்களாக வரவுள்ளீர்கள். எனவே இங்குபெறும் பயிற்சி எதிர்காலத்துக்கு முக்கியமானது என்றார்.

பல்கலைக்கழக உபவேந்தர் சார்பில் பல்கலைக்கழக சிரேஷ்ட நிர்வாகி ஐ.எம். இப்றாஹிம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.