மாவனெல்லை சிலையுடைப்பு விவகாரம்: கைதான 13 இளைஞர்களை பிணையில் விடுவிக்க உதவுக

பெற்றோர்கள் ஹலீம், முஜிபுர் ரஹ்மான், அசாத்சாலியிடம் கோரிக்கை

0 631

கண்டி மற்றும் மாவ­னெல்லையை அண்­மித்த பகு­தி­களில் இடம்­பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்­ப­வங்கள் தொடர்பில் கைது­செய்­யப்­பட்டு தொடர்ந்து விளக்கமறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 13 சந்­தேக நபர்­க­ளி­னதும் பெற்­றோர்கள் நேற்று அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத்­சாலி மற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் ஆகி­யோரைச் சந்­தித்து சந்­தேக நபர்­களை பிணையில் விடு­தலை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளுக்கு உதவி புரி­யு­மாறு வேண்டிக் கொண்­டார்கள்.

மாவ­னெல்லை, கண்டி பகு­தி­களில் புத்தர் சிலை உடைப்பு பிர­தான சந்­தேக நபர்­க­ளான சகோ­த­ரர்கள் இருவர் தொடர்ந்தும் தலை­ம­றை­வாக இருக்கும் நிலையில் அவர்­க­ளுடன் நட்பு பேணி­யி­ருந்­த­மைக்­காக குறிப்­பிட்ட 13 சந்­தேக நபர்­க­ளையும் பயங்­க­­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் குற்­றப்­பத்­தி­ரிகை தயா­ரித்து தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பது நியா­ய­மற்­றது என்று அவர்­க­ளது பெற்றோர் தாம் சந்­தித்த அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும், சட்­டத்­த­ர­ணி­யி­டமும் தெரி­வித்­தார்கள். இந்தச் சந்­திப்­புக்­கான ஏற்­பா­டு­களை முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

சந்­தேக நபர்கள் 13 பேரும் கேகாலை சிறைச்­சாலையில் சிறை­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அங்கு இவர்கள் புத்தர் சிலை­களை உடைத்­த­தாகக் கூறி துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்த பெற்றோர் அவர்­களை வேறு சிறைச்­சா­லைக்கு இடம்­மாற்றித் தரும்­ப­டியும் வேண்­டுகோள் விடுத்­தார்கள்.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட­ன­டி­யாக நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவை தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு சந்­தேக நபர்­களை கேகாலை சிறைச்­சா­லை­யி­லி­ருந்து கண்டி சிறைச்­சா­லைக்கு இட­மாற்­றும்­படி வேண்­டினார். அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள இட­மாற்­றத்­துக்கு அமைச்சர் கபீர் ஹாசிம் எதிர்ப்­புத்­தெ­ரி­விக்­காது விடின் ஏற்­பாடு செய்­வ­தாகக் கூறவே அமைச்சர் ஹலீம் அமைச்சர் கபீர் ஹாசிமின் விருப்­பத்­தையும் தொலை­பே­சி­யூ­டாகப் பெற்­றுக்­கொண்டார்.

சந்­தேக நபர்கள் விரைவில் கண்டி சிறைச்­சா­லைக்கு இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

13 சந்­தேக நபர்­களில் மூவரே திரு­ம­ண­மா­ன­வர்கள் எனவும் ஏனைய 10 பேரும் திற­மை­யாக சித்­தி­யெய்தி உயர் கல்வி கற்கும் மாண­வர்கள் எனவும் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

இவர்­க­ளது பிணை கோரிக்கை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக அமைச்சர் ஹலீம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத்­சாலி ஆகியோர் உறு­தி­ய­ளித்­தார்கள்.

குறிப்­பிட்ட சந்­தேக நபர்கள் 13 பேருக்கும் எதி­ராக பொலி­ஸா­ரினால் பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழேயே குற்றம் சுமத்­தப்­பட்டு வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அதனால் நீதிவான் நீதி­மன்­றத்­துக்கு பிணை வழங்கும் அதி­காரம் இல்லை, மேல் நீதி­மன்­றத்தின் மூலமே பிணை வழங்க முடியும். மேல் நீதி­மன்றம் பிணை வழங்­கு­வ­தென்றால் அதற்­கான விசேட காரணம் எது­வு­மி­ருக்க வேண்டும்.

பொலிஸார் இவர்­க­ளுக்­கெ­தி­ரான குற்­றங்­களை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழி­ருந்து சாதா­ரண சட்­டத்­திற்கு மாற்­றினால்  மாத்திரமே நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறான நிலையிலேயே 13 சந்தேக நபர்களினதும் பெற்றோர் அரசியல் வாதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார்கள்.

புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.