மாவனெல்லை சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வனாத்தவில்லுவில் கைதான இருவர் விடுதலை

ஏனைய இருவரும் தொடர்ந்தும் தடுப்புக்காவலில்

0 1,034

மாவ­னெல்லை புத்தர் சிலை­யு­டைப்பு சம்­ப­வத்தைத் தொடர்ந்து பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவி, ஒத்­தாசை புரிந்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு சி.ஐ.டி. யினரால் வனாத்­த­வில்­லுவில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நால்­வரில் இரு இளை­ஞர்கள் நேற்று முன்­தினம் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

புத்­த­ளத்தைச் சேர்ந்த சந்­தேக நபர்­க­ளான மொஹமட் நபீஸ் மொஹமட் நப்ரிக் (21) மற்றும் மொஹமட் நபீஸ் மொஹமட் நவீத் (19) ஆகிய இரு­வ­ருமே

நேற்று முன்­தினம் சி.ஐ.டி.யினரால் மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றில் வழக்கு இல. B/11330/18 ன் கீழ் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் (CID) பிரதம பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க குறிப்­பிட்ட சந்­தேக நபர்கள் இரு­வரும் இவ்­வ­ழக்­கிற்கு தேவைப்­ப­ட­மாட்­டார்கள் என நீதி­மன்றில் தெரி­வித்­த­தை­ய­டுத்து நீதிவான் இரு­வ­ரையும் விடு­தலை செய்தார்.

இவர்கள் இரு­வரும் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் 9 (1) ன் கீழ் 2019.01.11 ஆம் திகதி முதல் மூன்று மாத காலம் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இரு சந்­தேக நபர்­க­ளையும் குற்­றங்­க­ளி­லி­ருந்தும் விடு­தலை செய்த நீதிவான் ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விற்கு சமூ­க­ம­ளித்து கையொப்­ப­மிட வேண்­டு­மெ­னவும் தங்­க­ளது வசிப்­பி­டத்தில் மாற்­றங்கள் ஏற்­பட்டால் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அறி­விக்க வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்டார். ஊட­கங்களில் இவர்கள் வெடி பொருட்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­ட­தாக செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தாலும் சந்­தேக நபர்கள் இரு­வரும் குற்­ற­மற்­ற­வர்கள்– அப்­பா­விகள் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வனாத்­த­வில்­லுவில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில்  ஏனைய இரு இளை­ஞர்­களும் தொடர்ந்தும் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மாவ­னெல்லை மற்றும் கம்­ப­ளையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்­பாக 13 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

மாவ­னெல்லை சிலை உடைப்பு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட குழு­வினர் என்ற சந்­தே­கத்தின் பேரி­லேயே வனாத்­த­வில்­லுவில் 4 பேர் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். குறிப்­பிட்ட இரு இளை­ஞர்­க­ளி­னது விடுதலைக்காக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் சட்டத்தரணி சஜாத் மொஹமட் உட்பட சில அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.