பதவி நீடிப்புக்கான முயற்சி அரசியலமைப்புக்கு முரண்

0 683

ஜனா­தி­பதி தேர்­தலை எக்­கா­ரணம் கொண்டும் தாம­தப்­ப­டுத்த பொது­ஜன பெர­முன இட­ம­ளிக்­காது. ஏற்­கனவே உயர் நீதி­மன்­றத்தின் ஐந்து நீதி­ய­ர­சர்கள் வழங்­கிய தீர்ப்­பிற்கு சவால் விடுக்கும் வகையில் சட்ட வியாக்­கி­யா­னத்தின் ஊடாக ஜனா­தி­ப­தியின் பதவிக் காலத்தை 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்க சுதந்­திரக் கட்­சி­யினர் முயற்­சிக்­கின்­றமை அர­சி­ய­ல­மைப்­பினை கடு­மை­யாக மீறும் செயற்­பா­டாகும் என பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்தார். பொது­ஜன பெர­மு­ன­விற்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான பரந்­து­பட்ட கூட்­டணி தொடர்பில் நேற்று புதன் கிழமை எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மாகாண சபை தேர்தல் கால­வ­ரை­யறை­யின்றி பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. இது­வரையில் ஆறு மாகாண சபை­களின் பத­விக்­காலம் முடி­வ­டைந்­துள்ள நிலையில் நேற்று நள்­ளி­ர­வுடன் தென்­மா­காண சபையும், இம்­மாத இறு­தி­யுடன் மேல்­மா­காண சபையும் கலைக்­கப்­பட்டு மக்கள் பிர­தி­நிதிகள் இல்­லாமல் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் 8 மாகா­ணங்கள் நிர்­வ­கிக்­கப்­படும் நிலை ஏற்­படும். மாகாண சபை தேர்­தல் பிற்­போ­டு­வ­தற்கு சுதந்­திர கட்­சியும் முழு­மை­யான பொறுப்புக் கூற வேண்டும். தேசிய அர­சாங்­கத்தில் இரண்டு பிர­தான கட்­சி­களும் மக்­களின் அடிப்­படை உரி­மை­யான தேர்தல் உரி­மை­யினை பகி­ரங்­க­மாக பறித்­துள்­ளன.

அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் இவ்­வ­ரு­டத்தில் இடம் பெற வேண்­டிய ஜனா­தி­பதி தேர்­த­லையும் கட்­சியின் சுய­நல நோக்­கங்­க­ளுக்­காக பிற்­போ­டு­வ­தற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கவனம் செலுத்­து­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடி­யுமா என்று உயர் நீதி­மன்றில் பொருள் கோடலை கோர தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வரு­டத்தின் முதலாம் காலாண்டின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பதவிக் காலம் ஐந்து வரு­டமா அல்­லது ஆறு வரு­டமா என்­பது தொடர்பில் உயர்­நீ­தி­மன்­றத்தின் பொருள் கோட­லினை நாடினார். இவ்­வி­டயம் தொடர்பில் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு முக்­கி­யத்­துவப் படுத்­தப்­பட்­டது. இவ­ரது மனுத்­தாக்­க­லிற்கு உயர்­நீ­தி­மன்­றத்தின் 5 பிர­தம நீதி­ய­ர­சர்கள் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தின் 129 ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் 5 வருட காலங்­களே ஜனா­தி­பதி பதவி வகிக்க முடியும் என்று ஒரு­மித்த தீர்ப்­பினை வழங்­கி­னார்கள். இத்­தீர்ப்பு அப்­போது முழு­மை­யாக அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

உயர் நீதி­மன்றில் 5 நீதி­ய­ர­சர்­களின் ஒரு­மித்த தீர்ப்­பிற்கும், 19 ஆவது திருத்­தத்தின் 129 ஆவது அத்­தி­யா­யத்­திற்கும் சவால் விடுக்கும் வகையில் சுதந்­திரக் கட்­சி­யினர் செயற்­பட முனை­வது அர­சி­ய­ல­மைப்­பினை மீறும் செயற்­பா­டா­கவே கரு­தப்­படும். புதிய பிர­தம நீதி­ய­ரசர் ஏப்ரல் மாதம் 29 ஆம் திக­திக்கு முன்னர் நிய­மிக்­கப்­பட வேண்டும். புதிய பிர­தம நீதி­ய­ர­சரின் நிய­ம­னத்தின் பின்னர் ஜனா­தி­ப­தியின் பதவிக் காலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்­றினை நாடு­வ­தாக சுதந்­திர கட்­சி­யினர் குறிப்­பி­டு­வது பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிர­தம நீதி­ய­ர­சர்கள் மாற்­ற­ம­டையும் போது ஜனா­தி­ப­தியின் பதவிக் காலம் தொடர்பில் முன்னர் வழங்­கிய தீர்ப்­பினை மீள் பரி­சீ­லனை செய்­வது சாத்­தி­ய­மான விட­ய­மல்ல. ஜனா­தி­ப­தியின் பதவிக் காலம் மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் ஆட்­சே­பனை மனு தொடர்­பான நியா­யா­திக்கம் தொடர்பில் பிர­தம நீதி­ய­ர­சரால் தனித்து செயற்­பட முடி­யாது. குறைந்த பட்சம் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்கள் ஐவர் அடங்­கிய குழு­வினால் ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பதவிக் காலம் தொடர்­பி­லான மனுக்கள் விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்று அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தில் 129 ஆவது அத்­தி­யா­யத்தில் இரண்டாம் பிரிவில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமை­வாக சுதந்­திரக் கட்­சி­யினர் இவ்­வா­றான விட­யங்­களை மேற்­கொள்ள முனை­கின்­றார்கள் என்­பது சந்­தே­க­மாக உள்­ளது. ஐந்து வருட பத­விக்­காலம் என்று அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வாக குறிப்­பிட்­டுள்ள நிலை­யிலும் அதற்கு சவால் விடும் வகையில் செயற்­ப­டு­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு அவ­ம­திப்­பி­னையே ஏற்­ப­டுத்தும். மக்­களின் அடிப்­படை உரி­மை­க­ளான தேர்தல் உரி­மை­களை பறிக்கும் விட­யங்­க­ளுக்கு பிர­தான இரு கட்­சி­களும் தொடர்ந்து துணை போவது அர­சியல் கலா­சா­ரத்­திற்கு முர­ணா­ன­தாகும்.
சுய நல­மான விட­யங்­க­ளுக்­காக சுதந்­திரக் கட்சி மக்­களின் தேர்தல் உரி­மை­யினை பறிப்­ப­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­போ­டு­வது ஐக்­கிய தேசிய கட்­சியின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்ற வழி வகுக்கும். இதற்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் இடமளிக்காது.

மாகாண சபை தேர்தல் பிற்போடுவதற்கான பல காரணிகள் செல்வாக்கு செலுத்தலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட எக்காரணிகளும் கிடையாது. ஜனாதிபதி விரும்பினால் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும். அதனை நாம் தற்போது கோரவில்லை. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட தினத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும் . இல்லாவிடின் பாரிய எதிர் விளைவுகள் ஏற்படும் என்றார்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.