27 நக­ரங்­க­ளி­லி­ருந்து பல குடும்­பங்­களை நஷ்­ட­யீடு வழங்­காது இர­வோடு இர­வாக வெளி­யேற்­றினார் கோத்­தா­பய ராஜ­பக் ஷ

கடு­மை­யாக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கிறார் அமைச்சர் கபீர்

0 727

வீதி அபி­வி­ருத்­தியின் போது யாரு­டைய காணி­யையும் பலாத்­கா­ர­மாக பெற்றுக் கொள்­ள­வில்லை. ஆனால் கோத்­தா­பய ராஜபக் ஷ நகர அபி­வி­ருத்­திக்­காக 27 நக­ரங்­களைச் சேர்ந்த பல குடும்­பங்­களை ஒரு சத­மேனும் நஷ்­ட­யீடு வழங்­காமல் இர­வோடு இர­வாக வெளி­யேற்­றினார் என நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

அத்­துடன் மத்­திய நெடுஞ்­சா­லையை எதிர்­வரும் ஆகஸ்ட் இறு­திக்குள் திறந்து வைப்போம் எனவும் குறிப்­பிட்டார்.

நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

நாட்டின் பிர­தான நக­ரங்­களில் இடம்­பெற்று வரும் வாகன நெரிசல் கார­ண­மாக தொழி­லுக்கு வரு­வதும் மாலையில் வீடு செல்­வதும் பாரிய சவா­லாக மாறி­யுள்­ளது. அதேபோல் கிரா­மங்­களில் இருக்கும் வீதிகள் மோச­மான நிலையில் இருப்­பதால் மாண­வர்கள் மிகவும் கஷ்­டத்­துக்கு மத்­தி­யி­லேயே பாட­சா­லைக்குச் செல்­கின்­றனர். அதனால் இந்த குறை­பா­டு­களை, சவால்­களை குறைப்­பதே எமது நோக்­காக இருக்­கின்­றது.

மேலும் கொழும்பு நகரில் ஏற்­ப­டு­கின்ற வாகன நெரிசல் கார­ண­மாக நாளொன்­றுக்கு ஒரு பில்­லியன் ரூபா நாட்­டுக்கு நஷ்டம் ஏற்­ப­டு­கின்­றது. நாளொன்­றுக்கு 3 இலட்சம் வாக­னங்கள் கொழும்­புக்குள் வரு­வ­துடன் அதில் 2 இலட்சம் வாக­னங்கள் தனி நப­ருக்கு சொந்­த­மா­ன­தாகும். அதே­போன்று 10 இலட்சம் மக்கள் வரு­கின்­றனர்.  இவ்­வாறு நாட்டில் இருக்கும் பிர­தான நக­ரங்­களில் இந்த பிரச்­சினை இருந்து வரு­கின்­றது.  அதனால் இம்­முறை வரவு செலவு திட்­டத்தில் எமது அமைச்­சுக்கு 20 ஆயிரம் மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத­னூ­டாக நாட்டின் பிர­தான நக­ரங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வீதி அபி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வி­ருக்­கின்றோம்.

அத்­துடன் மத்­திய அதி­வே­கப்­பா­தையின் பணிகள் பூர்த்­தி­யாகும் கட்­டத்தில் இருக்­கின்­றது. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் மக்கள் பாவ­னைக்கு திறந்து விட எதிர்­பார்க்­கின்றோம். அதன் பின்னர் ஓர­ளவு வாகன நெரிசல் குறை­வ­டை­யலாம். தேசிய வீதி வலை­ய­மைப்பில் தற்­போது நில­வு­கின்ற போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி­களை குறைப்­பதன் மூலம் மக்கள் வீதி­களில் செல­விடும் நேரத்தை குறைத்து அத­னூ­டாக எரி­பொருள் செல­வி­னதும் பொரு­ளா­தார வீண்­வி­ர­யத்தை குறைப்­ப­துமே எமது நோக்­க­மாகும்.

மேலும் பிர­தான நகர வீதி அபி­வி­ருத்­தியைப் போன்று கிரா­மங்­களில் இருக்கும் வீதி­க­ளையும் அபி­வி­ருத்தி செய்ய பிரத்­தி­யே­க­மாக நிதி ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கின்றோம். ஒவ்­வொரு தேர்தல் தொகு­திக்கும் 180 மில்­லியன் ரூபாவை வீதி அபி­வி­ருத்­திக்கு வழங்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம். அதே­போன்று தோட்­டப்­புற வீதிகள், மதஸ்­த­லங்­க­ளுக்­கான வீதிகள் மற்றும் வடக்கு கிழக்கில் சேத­மாகி இருக்கும் வீதி­க­ளையும் அபி­வி­ருத்தி செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம்.

அத்­துடன் நாங்கள் வீதி அபி­வி­ருத்­திக்கு மக்­களின் காணி­களை அவர்­களின் அனு­ம­தி­யு­ட­னேயே பெற்றுக் கொள்­கின்றோம். அதற்­கான நஷ்­ட­யீட்டு தொகை­யையும் உட­ன­டி­யாக வழங்­கு­கின்றோம். ஆனால் கடந்த காலத்தில் வீதி அபி­வி­ருத்­திக்­காக பெற்றுக் கொள்­ளப்­பட்ட மக்­களின் காணி­க­ளுக்­கான நஷ்­ட­யீட்டை எமது அர­சாங்­கமே வழங்­கி­யி­ருந்­தது. 5 ஆயி­ரத்து 500 கோடி ரூபா நஷ்­ட­ஈடாக இது­வரை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதில் கடந்த அர­சாங்க காலத்தில் வழங்­க­வி­ருந்த தொகை 3 ஆயி­ரத்து 500 கோடி­யாகும்.

அதே­போன்று நகர அபி­ருத்­திக்கு பொறுப்­பாக இருந்த கோத்­தாபய ராஜபக் ஷ நக­ரங்­களை அபி­வி­ருத்தி செய்யும் போது பலாத்­கா­ர­மா­கவே மக்­களின் காணிகளை பெற்றுக் கொண்டார். 27 நகரங்களில் ஒரு சதமேனும் வழங்காமல் அந்த மக்களை இரவோடு இரவாக அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியே நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவ்வாறான எந்த நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மக்களின் விருப்பத் துக்கமையவே காணிகளை பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.