கருமலையூற்று பள்ளிவாசலை ரமழானுக்கு முன்னர் விடுவிக்குக

கிழக்கு ஆளுநரிடம் பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை

0 633

தரைப்­படை கவ­ச­வா­கன 4 ஆம் படைப்­பி­ரிவின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருக்கும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­தமான 139 பேர்ச் காணியை எதிர்­வரும் ரமழான் மாதத்துக்கு முன்பு விடுவித்து தரு­மாறு கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் நிர்­வாகம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்துள்­ளது. பள்­ளி­வாசல் 4 ஆம் படைப் பிரி­வி­னரால் 2014 ஆம் ஆண்டு உடைக்­கப்­பட்டு விட்­டதால் இப்­ப­குதி மக்கள் தற்­போது தற்­கா­லிக கூடாரம் அமைத்து ஜும்ஆ தொழு­கையில் மாத்­திரம் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் மழை­கா­லத்தில் தொழு­கையில் ஈடு­பட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் எதிர்­வரும் நோன்­புக்கு முன்பு பள்­ளி­வா­ச­லுக்­கு­ரிய முழுக்­கா­ணி­யையும் பெற்­றுத்­த­ரா­விட்டால் அதற்­கான போராட்­டங்­களில் ஈடு­பட வேண்டி நேரிடும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யின் தலைவர் எம். ஐ. ஜவாஹிர் இது தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில்;

‘கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 400 வருட காலம் பழைமை வாய்ந்­த­தாகும். பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணி 139 ஏக்­க­ரையும் பள்­ளி­வா­ச­லையும் தரைப்­படை கவச வாகன 4 ஆம் படைப்­பி­ரிவு ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டுள்­ளது. பழைமை வாய்ந்த பள்­ளி­வா­சலை படைப்­பி­ரி­வினர் 2014 ஆம் ஆண்டு உடைத்து தரை­மட்­ட­மாக்­கி­விட்­டார்கள்.

படைப்­பி­ரிவு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்­கு­வ­தாக பேச்­சு­வார்த்­தை­களின் பின்பு உறு­தி­ய­ளித்­தாலும் அதற்­கான சட்­ட­பூர்வ உறுதி வழங்­கப்­ப­ட­வில்லை. பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிப்­ப­தற்கு பிர­தேச செய­லகம் அனு­மதி தர மறுக்­கி­றது.

இதனால் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்க முடி­யா­ம­லி­ருக்­கி­றது. நாங்கள் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான 139 பேர்ச்சஸ் காணியை எம்­மிடம் மீள கைய­ளிக்க வேண்­டு­மெ­னவே கோரு­கிறோம். பள்­ளி­வா­சலில் தற்­போது வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆ தொழுகை மாத்­தி­ரமே கூடாரம் அமைத்து பாயில் நடை­பெ­று­கி­றது. சுமார் 500 பேர் ஜும்­ஆவில் கலந்து கொள்­கி­றார்­கள். மழை­கா­லங்­களில் ஜும்ஆ தொழ முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. அக்­கா­லங்­களில் சுனாமி பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் நோன்பு மாதத்­துக்கு முன்பு பள்­ளி­வாசல் காணி முழு­மை­யாக எம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்­டு­மென கிழக்கு மாகாண ஆளு­ந­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளோம். இல்­லையேல் நாம் போராட்­டங்­களை ஆரம்­பிப்போம்.

எமது கோரிக்­கை­களை பிர­தி­ய­மைச்சர் அப்­துல்லா மஹ்ரூப் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம்.எஸ். தௌபீக், இம்ரான் மஹ்ரூப் ஆகி­யோ­ரி­டமும் முன்­வைத்­துள்ளோம்.

கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி 139 பேர்ச்­சுடன் அப்­ப­கு­தியில் இருந்த அவ்­லியா சியாரம் உட்­பட 16 பேர்ச்சஸ் காணியும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அங்­கி­ருந்த அவ்­லியா சியாரம் அங்­கி­ருந்து சிதைக்­கப்­பட்டு அகற்­றப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லுக்குச் செல்லும் பிர­தான பாதை படைப்­பி­ரி­வி­னரால் தடை செய்­யப்­பட்டு மறைக்­கப்­பட்­டுள்­ளது. ஜும்ஆ தொழு­கைக்­காக கடற்­க­ரை­யூ­டாக மேட்டு நிலத்தில் ஏறியே செல்ல வேண்­டி­யுள்­ளது. மக்­களின் இந்த அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு அர­சி­யல்­வா­திகள் தீர்வு பெற்றுத் தர வேண்டும்.

அத்­தோடு இப்­ப­கு­தியில் மக்­களின் சுமார் 50 ஏக்கர் நிலம் விமானப் படை­யினால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கில் மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்டு வரும் நிலையில் இப்­ப­கு­தியில் மக்­க­ளது காணிகள் விடு­விக்­கப்­ப­டா­தி­ருக்­கி­றது. இது தொடர்­பி­லும் அர­சி­யல்­வா­திகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இது தொடர்பில் உப்­பு­வெளி பிர­தேச சபை உறுப்­பினர் பைரூஸ் கரீம் (ஐ.தே.க.) கருத்து தெரி­விக்­கையில்;

கரு­ம­லை­யூற்றில் தற்­கா­லிக கூடா­ர­மொன்­றிலே இப்­ப­கு­தி­ மக்கள் ஜும்ஆ தொழு­கையை நிறை­வேற்­று­கி­றார்கள். அங்கு செல்லும் பிர­தான வழியைப் பயன்­ப­டுத்த படைப்­பி­ரிவு தடை விதித்­துள்­ளது. கடற்­க­ரை­யூ­டான மாற்று வழியில் கம்­புகள் நடப்­பட்டு மேட்டு நிலத்தில் ஏறியே அங்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. எமது சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான 139 பேர்ச்சஸ் காணி­யையும் மீட்­டெ­டுக்க செயலில் இறங்­க­வேண்டும் என்றார்.

கல்வி அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

‘கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லையும் பள்­ளி­வாசல் காணி­யையும் படை­யினர் வச­மி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­காக நான் 2013 முதல் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்­கட்சி உறுப்பினராக இருந்தகாலம் முதல் முயற்சித்து வருகிறேன். குரல் கொடுத்து வருகிறேன். இப்பள்ளிவாசல் 2014 இல் படையினரால் உடைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக் ஷ அப்பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி பெற்றுத் தந்தார். இப்பள்ளிவாசலை சுமார் 1000 குடும்பங்கள் பயன்படுத்தின.

பள்ளிவாசலுக்கு சொந்தமான 139 பேர்ச்சஸ் காணியை படையினரிடமிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.