விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள்

0 812
  • ஏ.ஜே.எம்.நிழாம்

தமி­ழரின் உரி­மை­யி­லேயே முஸ்­லிம்­களின் உரிமை தங்­கி­யி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் உரி­மை­யிலே தமி­ழரின் உரிமை தங்­கி­யி­ருக்­கி­றது. தமி­ழரின் பாது­காப்­பிலே முஸ்­லிம்­களின் பாது­காப்பு தங்­கி­யி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் பாது­காப்­பிலே தமி­ழரின் பாது­காப்பு தங்­கி­யி­ருக்­கி­றது. தமி­ழரின் வாழ்­வா­தா­ரங்­க­ளி­லேயே முஸ்­லிம்­களின் வாழ்­வா­தா­ரங்கள் தங்­கி­யி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் வாழ்­வா­தா­ரங்­க­ளி­லேயே தமி­ழரின் வாழ்­வா­தா­ரங்கள் தங்­கி­யி­ருக்­கின்­றன. முழு ­இ­லங்­கை­யிலும் கூட இதே நிலைதான் உண்டு. சிங்­க­ளவர் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­தாலும் கூட தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரைத் தவிர்த்­து­விட்டு தனித்து வாழ­மு­டி­யாது. காரணம் இலங்கை ஒரு பல்­லின நாடு என்­ப­தே­யாகும். அத­னால்தான் பல்­லின நாட்டை பேரின யாப்பால் ஆள­மு­டி­யாது எனக் கூறி­யி­ருந்தேன்.

இத்­த­கைய மல்­டி­விஷன் என்னும் பன் முகப்­பார்­வைக்­குட்­பட்ட இனங்­களும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னூ­டா­கவே எல்லா இனங்­களும் தத்­த­மது தனித்­து­வங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும். சக­லரும் இலங்­கை­யரே என்னும் சமத்­துவப் பிரஜைக் கோட்­பாடு உறு­தி­யாக நிலை­நி­றுத்­தப்­ப­டும்­வரை இலங்கை போன்ற பல்­லின நாட்டில் ஒரு­போதும் இனப் பிரச்­சி­னையை அழிக்­கவே முடி­யாது. பல்­லி­னங்கள் வாழும் ஒரு நாட்டில் எல்­லோரும் சம பிர­ஜைகள் என்றால் ஒரு இனத்­தினர் முதற்­த­ரப்­பி­ர­ஜை­க­ளா­கவும் மறு இனத்­தினர் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளா­கவும் இருப்­பது எப்­படி?

கல்­முனை வடக்குத் தமி­ழர்கள் தனிப்­பி­ர­தேச சபையைக் கோரி­யி­ருக்­கி­றார்கள். மூதூ­ரிலும், தோப்­பூ­ரிலும் இதே வகை­யான பிரச்­சி­னைகள் இருப்­பதைப் போல் கல்­மு­னை­யிலும் இருக்­கி­றது. எனினும் கல்­மு­னையில் மட்­டுமே முஸ்­லிம்­களின் கெடு­பிடி காணப்­ப­டு­கி­றதே? இது ஏன்? அதற்கு மட்டும் ஏன் இந்த முக்­கி­யத்­துவம் முஸ்லிம் காங்­கி­ரஸின் அடிப்­படை நோக்­கங்­களில் ஒன்­றுதான் கரை­யோர மாவட்­ட­மாகும். சம்­மாந்­துறை, பொத்­துவில், கல்­முனை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி மாவட்டத் தலை­ந­க­ராக கல்­மு­னையே அமை­ய­வேண்­டு­மெ­னவும் அது விரும்­பு­கி­றது. அது கிழக்கில் உத்­தே­சித்­துள்ள முஸ்லிம் அதி­கார அல­குக்­கான தலை­ந­க­ரா­கவும் கல்­மு­னையே அமைகிறது. அதன் கார­ண­மா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் சனப்­ப­ரம்­ப­லிலும் நில ஆளு­மை­யிலும் கல்­மு­னையை வலுப்­ப­டுத்த முயல்­கி­றது. இல்­லா­விட்டால் கல்­முனை வடக்குப் பிர­தே­சத்­துக்­கான தமி­ழரின் கோரிக்­கையை மறுக்க வேறு­கா­ர­ண­மில்லை. சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபைக்­கான பிர­தேச கோரிக்­கையை மறுப்­ப­தற்கும் கூட இதுவே கார­ண­மாக இருக்­கலாம். ஏனெனில் அதற்கு வேறு கார­ணங்கள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. எனினும் சாய்ந்­த­ம­ருது முஸ்­லிம்­க­ளி­னதும் கல்­முனை வடக்குப் பிர­தேச தமி­ழர்­க­ளி­னதும் அடிப்­படை உரி­மை­களை வழங்­கா­ம­லி­ருந்து கொண்டு கரை­யோர மாவட்­டத்­தையும் முஸ்லிம் அல­கையும் பெற­வி­ளைவது சாத்­தி­ய­மாகப் போவ­தில்லை. முஸ்லிம் காங்­கி­ரஸும் கூட ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் இறப்­புக்­குப்பின் கரை­யோர மாவட்ட முஸ்லிம் அலகுக் கோரிக்­கை­களைக் காலம் கனியும் வரை பொதி­யாகக் கிடப்பில் வைத்­தி­ருக்­கி­றார்கள். இதற்குக் கார­ண­மாக சரி­யா­ன­தையும் பிழை­யான நோக்கில் செய்­யக்­கூ­டாது என ஸ்தாபகத் தலைவர் கூறி­யி­ருந்­த­தே­யாகும்.

கிழக்கில் கரை­யோர மாவட்­டத்­தையும் முஸ்லிம் அதி­கார அல­கையும் முஸ்­லிம்கள் பெற்­றுக்­கொள்­வ­தெனில் தமி­ழரின் நல்­லி­ணக்கம் முக்­கி­ய­மா­ன­தாகும். சாய்ந்­த­ம­ருது முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளையும் மறுத்­துக்­கொண்டு தனித்­துவத் தலைவர் அஷ்ரபின் இலட்­சி­யத்தை அடை­யவே முடி­யாது.

சாய்ந்­த­ம­ருது முஸ்­லிம்­களை கல்­முனை முஸ்­லிம்கள் சம­மாக மதிக்­க­வில்லை எனும் கணிப்­பீடு இருக்­கு­மாயின் கரை­யோர மாவட்­டத்­துக்­காக பொத்­துவில் மற்றும் சம்­மாந்­துறை முஸ்­லிம்கள் கல்­முனை முஸ்­லிம்­க­ளோடு இணை­வது எப்­படி? மறு­பு­றத்தில் முஸ்­லிம்­களே முஸ்­லிம்­களை சம­மாக மதிக்­க­வில்லை எனக் காரணம் காட்டி கல்­முனை வாழ் தமிழர் தனிப்­பி­ர­தேச சபை­கோ­ரு­வ­தற்கு நியா­யா­திக்கம் ஏற்­பட்டு விடும். இதற்கு கல்­முனை வாழ் முஸ்­லிம்­களின் சார்­பாக கருத்­து­ரைத்த ஸ்ரீல.மு.கா. எம்.பி. மன்சூர் என்ன கூறினார் தெரி­யுமா? கல்­முனை வடக்கு கல்­முனை தெற்கு என இரு பிர­தேச செய­ல­கங்கள் பற்­றிய நெருக்­க­டியே தற்­போது காணப்­ப­டு­கி­றது. குறிப்­பாக கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை முழு­மை­யாக்கும் முயற்­சியே இப்­போது இடம்­பெ­று­கி­றது. அன்று அதை உப அலு­வ­ல­க­மாக அமைக்கும் தேவை இருந்­த­போதும் தற்­போது அதற்­கான அவ­சியம் இல்லை. தற்­போது இங்கு தமி­ழரும் முஸ்­லிம்­களும் நெருக்­க­மாக வாழ்­வதால் தனிப் பிர­தேச அலு­வ­லகம் வேண்டும் என அழுத்தம் கொடுப்­பது அறிவு பூர்­வ­மான விட­ய­மல்ல.

கல்­முனை பிர­தேச செய­லகம் என்று ஒன்று மட்டும் இருக்­கட்டும். இரு சமூ­கங்­க­ளுக்கும் பத­வி­களைப் பகிர்ந்து வழங்­கலாம். வடக்கு பிர­தேச செய­லகம் என்று ஒன்றை வழங்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஒரு சில பிர­தே­சங்­களில் ஓர் இனம் சிறு­பான்­மை­யாக இருப்­பதால் பிரச்­சினை எழப்­போ­வ­தில்லை. இனப் பிரச்­சி­னையை உரு­வாக்க வேண்டாம். மேற்­படி பிர­தேச மக்­களின் பிர­தி­நி­திகள் ஒரு­கோ­ரிக்­கையை முன்­வைத்தால் அதை ஆரா­யலாம் அதற்கு மாறாக அறிவு பூர்­வ­மற்ற செயற்­பா­டு­களை கையாள எம்மால் இட­ம­ளிக்க முடி­யாது. நிகழ்ந்­தவை நிகழ்ந்­த­வை­யா­கட்டும் அனைத்­தையும் மறப்போம். தமி­ழரைப் பிழை­யாக வழி நடாத்தும் செயற்­பா­டு­களைக் கைவிட்டு விடுங்கள் என நான் எச்­ச­ரிக்­கின்றேன் எனக்­கூ­றினார். இவ­ரது கருத்து இது. தமிழ் தரப்பு என்ன கூறு­கி­றது பார்ப்போம். கல்­முனை– அம்­பாறை மாவட்­டத்தில் தமிழர் அதி­க­மாக வாழும் பிர­தே­ச­மா­யினும் நெடுங்­கா­ல­மாக எந்த அதி­கா­ரமும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­துக்கு வழங்­கப்­ப­டா­ததால் நிதி மற்றும் காணி அதி­கா­ரங்கள் பற்­றிய பிரச்­சி­னைகள் அங்கு உள்­ளன. அவற்றை அதற்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இது தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னை­யாகும் எனவும். இதே பிரச்­சினை மூதூ­ரிலும் தோப்­பூ­ரிலும் கூட இருக்­கவே செய்­கி­றது இதைப் பேசித் தீர்க்­கலாம் அதற்கு சகல இன­மக்­க­ளி­னதும் விருப்­பங்­களைக் கேட்டு செயற்­பட வேண்­டுமே தவிர குறித்த ஒரு­ த­ரப்­புக்­காக மட்டும் செயற்­ப­டக்­கூ­டாது எனவும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கூறி­யுள்ளார்.

இது பற்றி அம்­பாறை மாவட்ட எம்.பி. கவீந்­திரன் குறிப்­பி­டு­கையில் கிழக்கில் 27 பிர­தேச செய­ல­கங்கள் தரம் உயர்த்­தப்­பட்டு அனைத்து அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கையில் கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கமே தரம் உயர்த்­தப்­ப­டா­ததால் அதி­கா­ரங்கள் இன்றி புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது பார­தூ­ர­மான குற்றம் அல்­லவா? கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச மக்­க­ளுக்­கு­ரிய உரி­மையும் நீதியும் மறுக்­கப்­பட்­டுள்­ளன அல்­லவா? தமி­ழினம் நிர்­வாக ரீதியில் தனது நீதி மற்றும் காணி அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தக் கூடாது எனத் திட்­ட­மிட்டே தடுக்­கப்­ப­டு­கி­றது. இதை ஏற்­க­மு­டி­யாது. தமி­ழரின் உரி­மையை அவர்கள் பெறக்­கூ­டா­தென இந்த நல்­லாட்­சியில் தடுக்­கப்­ப­டு­வது நியாயம் அல்ல. இந்த நல்­லாட்­சியில் தமி­ழரின் உரிமை மறுக்­கப்­பட்­டுள்­ளது. மக்­க­ளுக்­கான நிர்­வா­கத்தை ஒழுங்­காகக் கொண்டு செல்­ல­மு­டி­யா­த­வாறு தடை­ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நீதி மறுக்­கப்­பட்­டுள்ள இவ்­வி­டயம் மனித உரிமை மீற­லே­யாகும். ஓர் இனத்­துக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­யு­மாகும்.

கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் நிலத்­தொ­டர்­பு­டை­ய­தாகும். கல்­முனை தெற்கு பிர­தேச முஸ்லிம் செய­லகம் நிலத் தொடர்பு அற்­ற­தாகும். எனவே எமக்கு எமது செய­லகம் வேண்டும் என்றார். இது தமிழ்த் தரப்­பினர் முன்­வைக்கும் கருத்­துக்­க­ளாகும். இதில் குறுக்­கிட்ட ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் அம்­பாறை மாவட்டம் தமிழர் கூடு­த­லாக வாழும் பிர­தே­ச­மாகும். அதி­லி­ருக்கும் கல்­முனை நக­ர­சபை மூன்று பிர­தேச சபைப் பிரி­வு­களைக் கொண்­டி­ருக்­கின்­றது. ஒரு பிர­தேச சபையில் தமிழர் அதி­க­மா­கவும் முஸ்­லிம்கள் குறை­வா­கவும் வாழு­கையில் மறு பிர­தேச சபையில்  முஸ்­லிம்கள் கூடு­த­லா­கவும் தமிழர் குறை­வா­கவும் வாழு­கின்­றனர்.

சாய்ந்­த­ம­ருது பிர­தே­ச­சபை விட­யத்தில் நெடுங்­கா­ல­மா­கவே அங்­குள்ள முஸ்­லிம்கள் தமக்கும் ஒரு பிர­தேச சபை வேண்டும் எனக்­கோரி வரு­கின்­றனர். அதை வழங்­கு­வதில் எவ­ருக்கும் எந்த பிரச்­சி­னை­களும் இல்லை. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் இதை ஆத­ரிக்­கி­றது. கிழக்கு மாகாண சபை­யிலும் கூட இதற்­கான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு ஒரு­வ­ரு­டத்­துக்கும் மேல் கழிந்­துள்­ளது. எனினும்  இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை யாவரும் இணங்­கிய இவ்­வி­ட­யத்தில் ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­மு­டி­ய­வில்லை என்னும் கேள்வி எழுந்­துள்­ளது எனக்­கூ­றி­யதும் அதற்கு பதி­ல­ளித்த ஹரீஸ் எம்.பி. பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இது பற்றி அமைச்­ச­ரிடம் பேசி­யுள்ளோம். எதிர்­கா­லத்தில் சாய்ந்­த­ம­ருது மற்றும் மரு­த­முனை பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்­க­ளையும் கல்­முனை முஸ்லிம் தலை­வர்­க­ளையும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளையும் அழைத்துப் பேச­மு­டிவு செய்­துள்ளோம் என்றார் ஹரீஸ். எனினும் விஜித ஹேரத் விட­வில்லை. இனப்­பி­ரச்­சினை, ஏற்­பட்­டு­விடும் எல்­லோரும் இணங்­கிய ஒரு விட­யத்தில் உங்­க­ளுக்­கான அர­சியல் வாக்­கு­க­ளுக்­கா­கவே நீங்கள் செயற்­ப­டு­வ­தா­லேயே பிரச்­சினை இழு­ப­டு­கி­றது இவ்­வாறு செய்­யா­தீர்கள் என்றார்.

அதற்கும் ஹரீஸ் எம்.பி. பதி­ல­ளித்தார். ஆரம்­பத்தில் 4 பிர­தேச சபைகள் இருந்­த­தைத்தான் முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாச ஒன்­றாக்­கினார். இப்­போது அதே­வ­கையில் நான்­காக்­கு­வதில் எந்த பிரச்­சி­னையும் இல்லை. எனினும் அவற்றை ஒரே நேரத்தில் பிரிக்­க­வேண்டும் என்றார். உடனே விஜித ஹேரத் எம்.பி. இதுவே அதி­காரப் பரவல் எனக்­கூ­றினார். அப்­போதும் ஹரீஸ் விட­வில்லை. இதில் எல்லைப் பிரச்­சினை இருக்­கி­றது. இது உங்­க­ளுக்குத் தெரி­யாது வந்­து­பா­ருங்கள் என சீண்­டி­விட்டார். அதற்கு வீறு­கொண்ட விஜித ஹேரத் எம்.பி.

நான் கல்­மு­னைக்கு வந்­தி­ருக்­கிறேன் எனக்கு இப்­பி­ரச்­சினை தெரியும். என்­னிடம் எல்லை நிர்­ணய வரை­ப­டமும் இருக்­கி­றது. நான் நெடுங்­காலம் இதைத் தெளி­வாக விளங்­கியே பேச வந்­தி­ருக்­கிறேன். தமிழர் கூடு­த­லாக வாழும் கல்­முனைப் பிர­தே­சத்தில் அவர்­களின் விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப காணி அதி­கா­ரங்கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்றே தமிழ்த் தரப்­பினர் குறிப்­பி­டு­கின்­றனர். அவர்­களின் கோரிக்கை சரி­யா­ன­தே­யாகும் என்றார். அப்­போதும் ஹரீஸ் விட­வில்லை இது­பற்றி நாமும் பேசு­கிறோம். எல்லை நிர்­ணயக் குழு­வோடும் பேசு­கிறோம் இதற்­கென ஒரு குழுவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. காரணம் இது­மி­கவும் நெருக்­க­டி­யான பிரச்­சி­னை­யாகும் என்றார்.

முடி­வாக விஜித ஹேரத் எம்.பி. ஹரீஸைப் பார்த்­துக்­கூ­று­கையில், உங்­க­ளிடம் தெளி­வாக பதில் இல்லை. நீங்­களே பிரச்­சி­னை­யாக இருக்­கி­றீர்கள். உங்­க­ளா­லேயே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. எல்லை நிர்­ணயப் பிரச்­சினை என எதுவும் இல்லை. இதை இப்­ப­டியே விட்டால் பாரிய இன­மோதல் ஏற்­பட்­டு­விடும் நான் முன் கூட்­டியே எச்­ச­ரிக்­கிறேன் ஞாபகம் இருக்­கட்டும் என்றார்.

இந்த சிக்­க­லான பிரச்­சி­னைக்குத் தீர்வு காணு­வ­தற்கு முன்­ப­தாக தகுந்த தெளிவைப் பெற­வேண்­டி­யி­ருக்­கி­றது.

* கிழக்கில் 27 பிர­தேச சபைகள் இயங்­கு­கையில் கல்­முனை வடக்கு பிர­தேச சபை மட்டும் ஏன் இல்லை.

* சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபை இருக்கக் கூடாதா?

* முன்பு போல் 4 பிரதேச சபைகள் இருப்பதே தீர்வு என்பது எப்படி?

* அட்டாளைச்சேனை உள்ளூராட்சி மன்றத்தை தரமுயர்த்தப் போகிறார்களே?

அம்பாறை– மட்டக்களப்பு –திருகோணமலை என்னும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நிலத்தொடர்பற்ற வகையிலேயே முஸ்லிம் அதிகார அலகு வேண்டும் என தனித்துவத் தலைவர் அஷ்ரப் வலியுறுத்தியிருந்தார். தென்கிழக்கு என அதை அடையாளப்படுத்தி தென்னிந்தியாவிலுள்ள நிலத் தொடர்பற்ற பாண்டிச்சேரி என்னும் புதுச்சேரியையும் உவமை காட்டியிருந்தார்.

ஆக கரையோர மாவட்டத்தையும் அதிகார அலகையும் கிழக்கு முஸ்லிம்கள் பெற்றுக்கொள்வதெனில் கிழக்குத் தமிழரின் இணக்கப்பாடும் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவையாகும். அதுபோல் வடக்கு, கிழக்கு தமிழர் சமஷ்டியையும், வடக்கு– கிழக்கு இணைப்பையும் ஈட்டிக்கொள்வதெனில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் இணக்கப்பாடும் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவையாகும்.

இரு சமூகங்களும் தத்தமது அபிலாஷைகளைப் பற்றி நோடியாகப் பேசி ஒழுங்கான தீர்மானத்துக்கு வராமல் ஒன்றுக்கொன்று ஒளித்து, பேரின அதிகார வர்க்கத்திடமே சரணடைகின்றன. இரு பூனைகளுக்கு ஒரு குரங்கு அப்பம் பங்கிட்ட கதையே நிகழ்கிறது. செக்கச்செவேலென செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடை நடந்து பாலைவனத்தையே நம்பி வந்து பலிவாங்கும் பூசாரியைத் தேடுதடா என்கிறது ஒருபாடல்…

 

Leave A Reply

Your email address will not be published.