இன அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருப்பது பெரும் குறையே

குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டில் ஜனாதிபதி

0 664

அர­சி­யல்­வா­தி­களின் பிழை­யான நட­வ­டிக்­கை­யாலே மொழியின் அடிப்­ப­டையில் நாங்கள் பிள­வு­பட்­டி­ருக்­கின்றோம். அதே­போன்று இன அடிப்­ப­டையில் பாட­சா­லை­களை பிரித்­தி­ருப்­பதும் இன நல்­லி­ணக்­கத்­துக்கு பெரும் குறை­யா­கவே நான் பார்க்­கின்றேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் அல் குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்பு வெளி­யீட்டு நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் மொழி­பெ­யர்ப்பின் முதல் பிர­தியை பெற்­றுக்­கொண்ட பின்னர் அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அல்­குர்ஆன் சிங்­கள மொழியில் மொழி­பெ­யர்த்து வெளி­யி­டப்­படும் இந்த தினம் வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க தின­மா­கவே நான் காண்­கின்றேன். அனைத்து மதங்­களின் போத­னை­க­ளையும் அனை­வரும் தெரிந்து வைத்­துக்­கொண்­டி­ருந்தால் பல இனத்­த­வர்கள் வாழும் எமது நாட்டில் இனக்­க­ளுக்­கி­டையில் மதங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தில்லை. அத­னால்தான் அல் குர்­ஆனை சிங்­கள மொழியில் மொழி­பெ­யர்த்து வெளி­யிடும் இந்த தினத்தை வர­லாற்று முக்­கி­ய­மான தின­மாக நான் கரு­து­கின்றேன்.

மேலும் வெள்­ளை­யர்­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் சிங்­களம் தமிழ் முஸ்லிம் வீரர்கள் ஒன்­றி­ணைந்து போரா­டி­ய­தால்தான் அன்று வெள்­ளை­யர்கள் எமக்கு சுதந்­தி­ரத்தை தந்து வெளி­யே­றி­னார்கள். என்­றாலும் எமது அர­சி­யல்­வா­தி­களின் பிழை­யான நட­வ­டிக்­கையால் நாங்கள் மொழி ரீதி­யாக பிள­வு­பட்டு ஒரு­வ­ருக்­கொ­ருவர் வைராக்­கி­யத்­துடன் செயற்­பட்டு சந்­தேக கண்­கொண்டு பார்க்க ஆரம்­பித்தோம். மொழி­யி­னாலே இந்த நிலை ஏற்­பட்­டது.

மேலும் வர­லாற்றில் சிங்­கள,தமிழ் முஸ்­லிம்­களின் இணை­பி­ரி­யாத செயற்­பா­டு­க­ளினால் மகிழ்ச்­சி­ய­டைக்­கூ­டிய கார­ணங்கள் இருப்­ப­துபோல் மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாத கார­ணங்­களும் இருக்­கின்­றன. இதில் பிர­தா­ன­மாக நான் குற்­றம்­சாட்­டு­வது மொழி அடிப்­ப­டையில் மக்­களை பிள­வு­ப­டுத்­திய  அர­சி­யல்­வா­தி­க­ளை­யாகும். இந்­தி­யாவில் பல மொழி­களை பேசக்­கூ­டி­ய­வர்கள் இருக்­கின்­றனர். பல இனத்­த­வர்கள் இருக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளிடம் தமது இனம் என்ன என்று கேட்டால் யாராக இருந்­தாலும் இந்­தியன் என்றே கூறு­வார்கள். எங்கள் நாட்­டில்தான், நான் சிங்­களம், தமிழ், முஸ்லிம் இனம் என்ற பிளவு இருக்­கின்­றது. இது எமது நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு பாரிய தடை­யாக இருக்­கின்­றது.

அதே­போன்று வர­லாற்றில் எமது அர­சி­யல்­வா­திகள் செய்­தி­ருக்கும் பாரிய தவ­றுதான் தமிழ் சிங்­கள, முஸ்லிம் மகா­வித்­தி­யா­ல­யங்கள் என்று பாட­சா­லை­களை பிரித்­த­தாகும். இது எமது இன நல்­லி­ணக்­கத்­துக்கு பெரும் குறை­யா­கவே நான் பார்க்­கின்றேன். பொ­லன்­ன­று­வையில் நான் ஒரு­பா­ட­சா­லைக்கு சென்றேன் அங்கு தமிழ்,சிங்­கள, முஸ்லிம் மாண­வர்கள் அனை­வரும் இருக்­கின்­றனர். இந்த முன்­மா­தி­ரியை இற்­றைக்கு 50 வரு­டங்­க­ளுக்கு முன் முன்னெடுத்­தி­ருந்தால் நாட்டில் பிளவு, சந்­தேகம் முற்­றாக இல்­லா­மல்­போ­யி­ருக்கும். அல் குர்ஆன் சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டி­ருப்­பது இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த மேற்­கொண்ட ஒரு நட­வ­டிக்­கை­யாகும். சிங்­கள மொழியில் இருப்­பதால் மாண­வர்கள் படிக்க வாய்ப்­பாக இருக்­கின்­றது. அதன் மூலம் இதன் சிந்­தனை என்ன என்­பதை உணர்ந்­து­கொள்­ளலாம்.

அதனால் சகல இன மதங்­களின் மூல வேதங்கள் மொழி பெயர்க்­கப்­ப­டு­வதன் ஊடாக அந்த மதங்­களின் சிந்­த­னை­களை அனை­வரும் விளங்­கிக்­கொள்­ளலாம். அதன் மூலம் மனி­தர்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் பிரச்­சி­னையை இல்­லா­ம­லாக்­கிக்­கொள்­ளலாம். அத்­துடன் சிங்­கள, முஸ்லிம் தமிழ் இனத்­த­வர்கள் மத்­தியில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வதும் அந்த மதங்­க­ளைச்­சேர்ந்­த­வர்­க­ளிடம் தான் சார்ந்த மதத்தின் கொள்­கையை பின்­பற்றி நடக்க தவ­றி­ய­மை­யாகும். அதே­போன்று சில மதத்­த­லை­வர்­களும் தான் சார்ந்த மக்­களை பாது­காத்­துக்­கொள்ளும் வகையில் செயற்படுகின்றார்களே அன்றி ஏனைய இனத்தவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை.

எனவே இவ்வாறான காலகட்டத்தில் அல்குர்ஆன் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, நல்லிணக்கத்தை எற்படுத்த மேற்கொண்ட சிறந்த முயற்சியாகும். இதனை மேற்கொள்ள முன்னின்று செயற்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.