கோத்தா வேட்பாளரெனின் பொதுஜன பெரமுனவுடன் இனியும் பேசி பயனில்லை

0 708

கோத்­தா­பய ராஜபக் ஷதான் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் என்றால் அவர்கள் உறு­தி­யான நிலைப்­பாட்­டினை எம்­மிடம் தெரி­விக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யி­ன­ருக்கு  தனித்து தேர்­தலில் கள­மி­றங்க முடி­யு­மென்றால் எம்­முடன் பேச்­சு­வா­ரத்தை நடத்­த­வேண்­டிய எந்த அவ­சி­யமும் இல்லை என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின்  பொதுச்­செ­ய­லா­ளரும் சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். எதிர்­வரும் 10 ஆம் திகதி பேச்­சு­வார்த்­தையே பொது இணைக்­கப்­பாட்டை எட்டும்  இறுதிப் பேச்­சு­வார்த்­தை­யாக இருக்க வேண்டும். அதற்கு அப்பால் பேச்­சு­வார்த்­தைக்கு அவ­சி­ய­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர் நடத்­த­வுள்ள பேச்­சு­வா­ர்த்தை நகர்­வுகள் மற்றும் தேசிய அர­சாங்­க­மாக மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பய­ணிக்­க­வுள்­ள­தாக கூறப்­படும் கார­ணிகள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலை எந்தக் கட்­சியும் தனித்து வெற்­றி­கொள்ள முடி­யாது, இன்று ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யாக  செயற்­படும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இல்­லாது வெற்றி பெற­வேண்டும் எனவும் எம்மை நிரா­க­ரித்து செயற்­பட வேண்டும் எனவும் கூறு­கின்­றனர். அந்த தைரியம் இருந்தால் அவர்கள் தனித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும். தைரியம் இருந்தால் தனித்து கள­மி­றங்­கலாம். ஆனால் எந்த கட்­சி­யாலும்  தனித்து கள­மி­றங்கி வெற்­றி­பெற முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எம்மால் தனித்து வெற்றி பெற முடி­யாது, எமக்கு இது நன்­றா­கவே தெரியும். ஆகவே  நாம் அவற்றை செய்ய மாட்டோம். கூட்­டணி அமைக்க வேண்டும் என்ற நோக்­கத்தில் நாம் உள்ளோம். அதற்­கா­கவே நாம் முயற்­சித்தும்  வரு­கின்றோம். எம்மால் எவ்­வாறு தனித்து வெற்­றி­பெற முடி­யாதோ அதேபோல் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யி­னாலும்  தனித்து பய­ணிக்க முடி­யாது. நாம் பிர­தான கட்சி அல்ல. அவர்­க­ளுக்கு அதிக பலம் உள்­ளது. ஆனால் வேட்­பாளர் ஒருவர் குறித்து அவர்கள் மட்­டுமே தீர்­மா­னிக்க முடி­யாது. அவர்­களால் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்கி வெற்­றி­பெற முடியும் என்றால் அவர்கள் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தாது பய­ணிக்­கலாம் அதற்கு நாம் தடை இல்லை. எம்­மாலும் வேட்­பா­ளரை கள­மி­றக்க முடியும்.

அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவினால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க முடி­யாது, அவர் பிர­தமராகலாம். அவரை பிர­த­ம­ராக நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். இப்­போது பிரச்­சினை ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்­ததே. அதில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பல காரி­யங்­களை செய்­துள்ளார். அவரை மீண்டும் கள­மி­றக்கி நாட்­டினை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல முடியும். அப்­படி பார்த்­தாலும் இரண்டு கட்­சி­களின் தலை­வர்­களும் நாட்டின் தலை­வர்­க­ளாக இருப்­பார்கள். ஆகவே ஜனா­தி­பதி எமது பக்­கமும் பிர­த­மரை அந்­தப்­பக்­கமும் நிய­மிப்போம் என்­பதே எமது நிலைப்­பாடு. அதற்­க­மைய செயற்­பட விரும்­பினால் நாமும் கூட்­ட­ணிக்கு தயார். எமக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பாது­காக்க வேண்டும். எம்மால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்த முடி­யாது. பிர­தான இரண்டு பத­வி­களும் இரண்டு தரப்­பி­னரும் பகிர்ந்­து­கொள்ள வேண்டும்.  அவ்­வாறு இல்­லாது கோத்­தா­பய ராஜபக் ஷதான் அவர்­களின் வேட்­பாளர் என்றால் அது குறித்து இறுதி தீர்­மானம் எடுத்­து­விட்டு எம்­முடன் பேச்­சு­வார்த்­தைக்கு வர­வேண்டும். அதன் பின்னர் நாமும் எமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்க முடியும். அவ்­வாறு இல்­லாது  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பழி­வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் தான் செயற்­ப­டு­வார்கள் என்றால் நாம் எதற்கும் பிடி­கொ­டுக்க தயா­ரில்லை .

இன்று பொது­ஜன முன்­ன­ணி­யாக வீர  வசனம் பேசும் அனை­வரும் ஸ்ரீலங்கா சுதந்­தர கட்­சியில் இருந்­த­வர்­களே. அவர்­களை மீண்டும் நாம் எம்­முடன் இணைந்­து­கொள்ள அழைப்பு விடுத்தோம். நாம் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற பிர­தான கார­ணமே அவர்கள் எம்­முடன் இணைந்­து­கொள்­வார்கள் என்ற வாக்­கு­று­திதான். அவர்கள் அந்த வாக்­கு­று­தியை கொடுத்­தனர். ஆனால் இப்­போது அவர்கள் மாற்று நிலைப்­பாட்டில் உள்­ளனர். அதேபோல் இப்­போது இரண்டு தரப்­பினர் இடை­யிலும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு வரு­கின்­றது, இதில் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து மட்­டுமே பேசு­வது ஏன். கட்­சி­யாக இணைந்து பய­ணிக்க தயா­ரில்­லாது ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்றி மட்டும் பேசு­வது அர்த்­த­மில்­லாத நிலை­மையில் அமைந்­துள்­ளது. இன்று வரையில் இரண்டு தரப்­பி­ன­ரதும் பேச்­சு­வார்த்தை தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளது. இவ்­வாறு பேச்­சு­வார்த்­தைகள் காலம் கடத்­த­பட வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. இணை­வ­தென்றால் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி  இணைந்து பய­ணிக்க முடியும். விட்­டுக்­கொ­டுப்­புக்கு நாம் தயார், ஆனால் அவர்கள் இடம் கொடுக்­க­வில்லை. அநே­க­மாக எதிர்­வரும் 10 ஆம் திகதி பேச்­சு­வார்த்தை ஒரு முடி­வுக்கு வர வேண்டும். இதில் நாம் இணை­வதா பிரி­வதா என்­பது குறித்து இறு­தி­யாக ஒரு முடிவு எட்­டப்­பட வேண்டும். தீர்­மானம் எடுக்கும் இறுதிப் பேச்­சு­வார்த்தை 10 ஆம் திகதி பேச்­சு­வார்த்­தை­யா­கவே இருக்க வேண்டும்.

மேலும் தேசிய அரசாங்கம் குறித்து நாம் ஆராயவில்லை, தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றால் நான் கட்சியின் செயலாளர் என்ற வகையில்  கைச்சாத்திட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவில்லை. இணையும் நோக்கமும் இல்லை. பொய்யான காரணிகளை பொதுஜன முன்னணியினரே பரப்புகின்றனர். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். எமக்கு அது நன்றாகவே தெரியும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.