பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்கலாம்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

0 559

பாகிஸ்தான் மீது இந்­தியா இந்த மாதம் மீண்டும் தாக்­குதல் நடத்தும் என்று உள­வுத்­து­றையின் நம்­பத்­த­குந்த தக­வல்கள் தெரி­விப்­ப­தாக பாகிஸ்தான் வெளி­யு­றவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரி­வித்­துள்­ள­தாக ரொய்ட்டர்ஸ் செய்தி முகாமை தெரி­விக்­கி­றது.

இந்தப் பிராந்­தி­யத்தில் போர் பீதியை உண்­டாக்கும் நோக்­கத்­துடன் கூறப்­பட்­டுள்ள பாகிஸ்தான் வெளி­யு­றவு அமைச்­சரின் பொறுப்­பற்ற மற்றும் அபத்­த­மான கருத்­து­களை மறுப்­ப­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­கத்தின் செய்­தித்­தொ­டர்­பாளர் இதற்கு பதி­ல­ளித்­துள்ளார்.

எல்லை தாண்டி ஒரு­வரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்­ப­வங்களால் பெப்­ர­வரி மாதம் இரு நாடு­க­ளுக்கும் இடையே உண்­டான பதற்றம் தணிந்து வரு­வ­தாகத் தோன்றி வரும் சூழலில், இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் ஷா மஹ்மூத் குரேஷி இதைத் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் தாக்­குதல் ஏப்ரல் 16 முதல் 20 வரை­யி­லான கால கட்­டத்தில் நடக்க வாய்ப்­புண்டு என்றும் தங்கள் கவ­லை­களை ஐ.நா பாது­காப்பு அவையின் ஐந்து நிரந்­தர உறுப்பு நாடு­க­ளிடம் பகிர்ந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

எனினும் பாகிஸ்­தா­னிடம் என்ன ஆதாரம் உள்­ளது, எந்த நேரத்தில் இந்­தியா தாக்­குதல் நடத்தும் போன்ற தக­வல்­களை அவர் தெரி­விக்­க­வில்லை.

இது குறித்த தக­வல்­களை பிர­தமர் இம்ரான் கான் நாட்டு மக்­க­ளிடம் பகிர்ந்து கொள்வார் என்று குரேஷி தெரி­வித்தார்.

பாகிஸ்­தானில் இருந்து இயங்கும் தீவி­ர­வாத அமைப்­பு­களை இந்­தியா மீது தாக்­குதல் நடத்தத் தூண்­டவே பொது வெளியில் பாகிஸ்தான் இவ்­வாறு பேசு­கி­றது என்று இந்­திய வெளி­யு­றவுத் துறை வெளி­யிட்­டுள்ள மறுப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தியா மீது நடத்­தப்­படும் எல்லை தாண்­டிய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் தமக்கு இருக்கும் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் தம்மைத் தாமே விடு­வித்துக் கொள்ள முடி­யாது.

தமது சொந்த மண்ணில் நடக்கும் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக நம்­ப­கத்­தன்மை மிக்க மற்றும் மாற்ற முடி­யாத நட­வ­டிக்­கை­களை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்­தியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

எல்லை தாண்­டிய பயங்­க­ர­வாத செயல்­க­ளுக்கு எதி­ராக தீர்க்­க­மான மற்றும் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க இந்­தி­யா­வுக்கு உரிமை உள்­ளது என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

பெப்­ர­வரி 14 அன்று, இந்­திய ஆளு­கையின் கீழ் உள்ள காஷ்­மீரின் புல்­வா­மாவில் ஜெய்ஷ்-­இ-­மு­க­மது அமைப்பு நடத்­திய தாக்­கு­தலில் இந்­தியப் படை­யினர் குறைந்­தது 40 பேர் கொல்­லப்­பட்­டனர்.

பின்னர் பெப்­ர­வரி 27 அன்று, பாகிஸ்தான் எல்­லையில் இருக்கும் தீவி­ர­வா­திகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்­தியா தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறி­யது.

அடுத்த நாள் இந்­திய விமா­னப்­படை விமா­னத்தைச் சுட்டு வீழ்த்­திய பாகிஸ்தான், அதன் விமா­னி­யையும் சிறை­பி­டித்­தது. பின்னர் அவர் விடு­தலை செய்­யப்­பட்டார்.

பாகிஸ்தான் போர் விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­ய­தாகக் கூறி இந்­தியா போர்ப் பதற்­றங்­களை அதி­க­ரிப்­ப­தாக பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் குற்றம் சாட்­டி­யி­ருந்தார்.

சுட்டு வீழ்த்­தப்­பட்ட பாகிஸ்தான் எப்-16 விமா­னத்தில் இருந்து ஏவப்­பட்ட ஏவு­க­ணையின் பாகங்கள் என்று சில பாகங்­களை இந்­தியா காட்­டி­யது.

இந்த சம்­ப­வங்­க­ளுக்குப் பிறகு சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்­துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்­பட்­டது.

செயற்­கைக்கோள் புகைப்­ப­டங்­களில் சேதம் அதிகம் தெரி­யா­ததால், பால­கோட்டில் இருந்த தீவி­ர­வாத முகாம் மீது இந்­தியா நடத்­திய தாக்­கு­தலின் வெற்றி குறித்து கேள்­விகள் எழுந்­தன.

தங்கள் நாட்டில் உள்ள இந்­தியக் கைதிகள் 360 பேரை விடு­விக்கப் போவ­தாக பாகிஸ்தான் வெள்­ளி­யன்று தெரி­வித்­தது.

அவர்­களில் 100 பேர் ஞாயி­றன்று விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

எல்லையைத் தாண்டி மீன் பிடித்­த­தாக கைதான இந்­திய மீன­வர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் பல மாதங்களை பாகிஸ்தான் சிறையில் கழித்தனர்.

லாகூர் அழைத்துச் செல்லப்படும் அவர்கள் வாகா, அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என ஈதி பவுண்டேஷன் எனும் பாகிஸ்தான் தொண்டு அமைப்பைச் சேர்ந்த சாத் ஈதி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.